நாயக் | |
---|---|
இயக்கம் | சங்கர் |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
கதை | சங்கர் அனுராக் காஷ்யப் (வசனம்) |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | அனில் கபூர் ராணி முகர்ஜி அம்ரிஷ் பூரி பாரேஷ் ராவல் ஜானி லிவர் சௌரப் சுக்லா |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிறீ சூர்யா மூவிசு |
வெளியீடு | செப்டம்பர் 7, 2001 |
ஓட்டம் | 187 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
நாயக் என்பது 2001ஆவது ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படமாகும். அனில் கபூர், ராணி முகர்ஜி, அம்ரிஷ் பூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3] இத்திரைப்படம், அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் 1999இல் தமிழில் வெளியான முதல்வன் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் தமிழில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் ஏற்கனவே இடம்பெற்ற பாடல்களாகும். அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை. மினிஸ்டர் என வங்காளத்தில் கசி கயாத் இயக்கத்தில் மன்னா, மௌசுமி நடிப்பில் உருவான இத்திரைப்படம் நாயக் திரைப்படத்துடன் இணைந்தே வெளியானது.