செட்டோடெசு எருமே (நாய் அடல்மீன்) | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | புளுரோநெக்டிபார்மிசு
|
குடும்பம்: | செட்டோடிடே
|
பேரினம்: | செட்டோடெசு
|
இனம்: | எருமே
|
இருசொற் பெயரீடு | |
செட்டோடெசு எருமே பிளாச் & செனிடர், 1801[1] |
நாய் அடல்மீன் அல்லது எருமை நாக்கு (Psettodes erumei) என்பது செங்கடலில் இருந்து வடக்கு ஆத்திரேலியா வரை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களிங் காணப்படும் ஒரு வகை தட்டைமீன் ஆகும்.[2]
இதன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போலவே, இது மிகவும் பழமையான தட்டைமீன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சற்று தட்டையான உடல் கொண்டது. இந்த மீனானது பிறக்கும்போது இயல்பான மீன்களைப் போன்று இருபக்கமும் கண்கள் கொண்டிருக்கும். ஆனால் சிலநாட்கள் கழித்து இதன் ஒரு கண் இடம்பெயர்ந்து மேல் நோக்கி பயணமாகி மறுபக்க கண்ணின் மேலான முதுகு தூவி முனையருகே சென்றுவிடும். ஈள்வட்டமான இந்த மீனுக்கு இரு கண்களும் ஒரே பக்கமாக இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இது தன் முதுகுத் துடுப்புகளுக்கு முன்னால் தண்டுவடம் போன்ற கதிர்களைக் கொண்டிருப்பதன் மூலம் இது தன் உறவு மீன்களானன பிசெட்டோட்ஸ் பெல்ச்சேரி போன்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. இதன் மேல்பகுதி பழுப்பு சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். இது தன் உடலின் மேற்பகுதியில் பல கோடுகளைக் கொண்டுள்ளது. இது அதன் உடல் நிறத்தை விட சற்று மங்கியதாகவோ அல்லது வெளிர் வெள்ளை வரையோ இருக்கும். இதன் பெரிய வாயில் பலமான ஈரடுக்கு பற்கள் இருக்கும். இரவாடியான இந்த மீன் பகல் முழுவதும் மணல் அல்லது சேற்றில் மறைந்திருக்கும். இரவில் வெளிவந்து மீன்களை வேட்டையாடும். இவை வழுவழப்பான மீன்களாகும். கைகளால் பிடித்தால் வழுக்கக்கூடியவை.[3]