தனிநபர் தகவல் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
சுட்டுப் பெயர்(கள்) | நிக்கி | |||||||
தேசியம் | இந்தியர் | |||||||
பிறப்பு | 14 சூன் 1996 நிசாமாபாத் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்காணா), இந்தியா | |||||||
எடை | 51 கிலோகிராம்கள் (112 lb) | |||||||
விளையாட்டு | ||||||||
விளையாட்டு | குத்துச் சண்டை | |||||||
எடை வகுப்பு | பிளைவெயிட் | |||||||
பதக்கத் தகவல்கள்
|
நிகத் ஜரீன் (Nikhat Zareen) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்சாரா பெண் குத்துச்சண்டை வீரராவார். 1996 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார்.
2011 ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் ஆந்தாலியா நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு தொழில்சாரா குத்துச்சண்டை சங்கத்தின் இளையோர் மற்றும் இளைஞர்களுக்கான உலக சாம்பியன் பட்டப் போட்டியில் பிளைவெயிட் எனப்படும் 49 கிலோ முதல் 51 கிலோ வரையிலான எடைப்பிரிவில் போட்டியிட்டு நிகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.[1] குவகாத்தியில் நடைபெற்ற 2 வது இந்திய திறந்தநிலை பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியிலும் இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் பேங்காக்கு நகரத்தில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான தாய்லாந்து திறந்தநிலை பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியிலும் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[2] தெலங்காணா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் வி. சீனிவாச கவுடு நிகத்திற்கு இருசக்கர மின்சார வாகனத்தையும், தெலுங்கானாவின் விளையாட்டு ஆணையத்தினர் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசை வழங்கி சிறப்பித்துள்ளனர்.[3][4] குத்துச்சண்டை வீரர் மேரி கோமை தனது முன்மாதிரி என்று ஒரு நேர்காணலில் நிகத் கூறியுள்ளார்.[5]
இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள நிசாமாபாத்தில் முகமது ஜமீல் அகமதுவுக்கும், பர்வீன் சுல்தானா என்பவருக்கும் மகளாக நிகத் பிறந்தார்.[6][7][8] நிசாமாபாத்தில் உள்ள நிர்மலா இருதயா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.[9] தெலங்காணாவின் ஐதராபாத்தில் உள்ள ஏ.வி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.[10]
தன்னுடைய 13 வயதிலேயே நிகத் குத்துச்சண்டையை தொடங்கினார்.தந்தையிடம் பயிற்சி பெற்றுவந்த நிகத்[9] 2009 ஆம் ஆண்டு முதல் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து துரோணாச்சார்யா விருது பெற்ற ஐ.வி.ராவின் கீழ் பயிற்சி பெற்றார்.
அடிடாசு நிறுவனம் தனது விளம்பரத் தூதுவராக நிகத்தை ஒப்பந்தம் செய்தது[17] வெல்சுபன் குழுமமும் நிகத்தை ஆதரிக்கிறது. இந்திய விளையாட்டு ஆணையம் " ஒலிம்பிக் போட்டியின் இலக்கு" திட்டத்தில் நிகத்தைச் சேர்த்துள்ளது.[18][19] தனது சொந்த மாநிலமான தெலங்கானாவின் நிசாமாபாத்திற்கு அதிகாரப்பூர்வத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.[20]
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)