நிகிதா ஆனந்த் | |
---|---|
பாசுடு பைவ் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் நிகிதா | |
பிறப்பு | நிகிதா ஆனந்த் 1983[1] ஜலந்தர், பஞ்சாப், இந்தியா |
பணி | வடிவழகி, நடிகை |
'நிகிதா ஆனந்த் ( Nikita Valentinaa ) நிகிதா வாலண்டினா எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர், வடிவழகியாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் மற்றும் அழகுப் போட்டியின் வெற்றியாளராகவும் உள்ளார். இவர் மிஸ் யுனிவர்ஸ் 2003 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் இவர் வெற்றி பெறவில்லை. 1992 இல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் 2002 வரை பதினொரு வருடம் தொடர் வெற்றியைப் பெற்றார்.
நிகிதா பஞ்சாபின் ஜலந்தரில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பிரிகேடியர் எஸ். எஸ். ஆனந்த், [2] இந்திய ராணுவத்தில் ஒரு மருத்துவர். அவரது பணி நிமித்தமாக அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே நிகிதாவும் வெவ்வேறு பள்ளிகளில் (மகாராட்டிராவின் புனேவிலுள்ள புனித மேரி பள்ளி ; சார்க்கண்டின் ராஞ்சியிலுள்ள பிஷப் வெஸ்ட்காட் பெண்கள் பள்ளி; மும்பையின் கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளிகள் மற்றும் புது தில்லியிலுள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் படிக்க வழிவகுத்தது.[3] இவருக்கு ஒரு சகோதரனும் இருக்கிறார்.[4]
நிகிதா ஆனந்த் கைக்கடிகாரங்களை சேகரிப்பதில் ஆர்வமுடையவர். [5] இவர் இப்போது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான ஆசிய அகதாமியின் சர்வதேச மகளிர் திரைப்பட மன்றத்தின் உறுப்பினராக உள்ளார்.
நிகிதா ஆனந்த் தனது ஆரம்ப கட்டத்திலேயே அழகுப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். மேலும் 13 வயதில் மிஸ் ராஞ்சியாக முடிசூட்டப்பட்டார். இவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தார் [4]
தில்லியின் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியாக இருந்தபோது, 2003 இல் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்றார். போட்டியில் மன்னிப்பு கேட்படதைவிட மன்னிப்பதே சிறந்தது என்று நினைக்கிறாரா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வீகமானது. மேலும் நாம் மன்னித்து வாழ்க்கையை சிறப்பாக மாற்ற வேண்டும்" என பதில் அளித்தார். பின்னர் முந்தைய வெற்றியாளரான நேஹா தூபியாவால் முடிசூட்டப்பட்டார். மேலும் பனாமாவின் பனாமா நகரில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றார். [6]
பின்னர் இவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிரேயசு தள்பதே என்ற நடிகருடன் இணைந்து தில் தோஸ்தி திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் இவர் பிரேர்ணா என்ற கல்லூரி மாணவியாக நடித்தார். திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.[7]
பின்னர் மனிஷா கொய்ராலாவுடன் ஏக் செகண்ட்...ஜோ ஜிந்தகி பாதல் தே? ( 2010 ) மற்றும் நிலேஷ் மல்ஹோத்ராவின் இயக்கத்தில் சீனத் அமானுடன் மோனோபோலி - தி கேம் ஆஃப் மணி ஆகிய படங்களில் பணிபுரிந்தார். முந்தையது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [8]