நிக்கோலா ஜேன் பிரவுன் (Nicola Jane Browne, மடமாடாவில், பிறப்பு: செப்டம்பர் 14 1983); நியூசிலாந்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆவார்.
நியூசிலாந்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்[1]. 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றார் மற்றும் 2010 ஐசிசி மகளிர் உலக டி 20 போட்டித் தொடரின் ஒரு வீராங்கனையாக இருந்தார். சாரா சுகிகாவாவுடன் நிக்கோலா பிரவுன் மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகள் வரலாற்றில் அதிகபட்சம் 7 வது விக்கெட் கூட்டணியை அமைத்தார்[2] (104 *) மகளிர் உலகக் கோப்பையின் வரலாற்றில் (139 *) அதிகமான சாதனையை சாரா மெக்லாசானுடன் 6 வது விக்கெட் கூட்டணியில் நிகழ்த்தினார்.[3] 2015 ஆம் ஆண்டு ஜனவரியில், நிகோலா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.
பிறப்பு | 14 செப்டம்பர், 1983 (வயது 35 ஆண்டுகள்) |
பிறந்த இடம் | நியூசிலாந்து |
துடுப்பாட்ட நடை | வலது கை |
பந்தாட்ட முறை | வலது கை |