நிக் சுசிமனேக் Nik Szymanek | |
---|---|
![]() 20122 ஆம் ஆண்டு தேசிய வானியல் கூட்டத்தில் சுசிமனேக் உரை | |
தேசியம் | பிரித்தானியர் |
அறியப்படுவது | வான் ஒளிப்படவியல், மின்னூட்டப் பிணைப்பு கருவிவழி படிம மாக்கல் |
நிக்கோலசு சுசுமனேக் (Nicholas Szymanek) அல்லது நிக் சுசிமனேக் எனப்படும் இவரொரு பிரித்தானியப் பயில்நிலை வானியலாளரும் திறம் மிக்க வான் ஒளிப்படவியலாளரும் ஆவார். இவர் இங்கிலாந்திலுள்ள எசெக்சுஎனும் பகுதியில் வாழ்ந்து வந்தார்.[1]
முதலில் இவர் இலண்டன் நிலத்தட் தொடருந்து ஓட்டுநராக இருந்துள்ளார். பின்னர் இவர் 1991 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்பு வானியல் மின்னூட்டப் பிணைப்புக் கருவிவழி படிம மாக்கலில் ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளார். இவர் அயான் அரசரை 1991 இல் சந்தித்த பிறகு இத்தகைய நோக்கீட்டு வானியலில் இவருக்கு ஆர்வம் பிறந்துள்ளது. அயான் அரசரும் ஒரு பயில்நிலை வானியலாளராகவும் ஏவெரிங்கு வானியல் கழக ஆய்வுறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2]
இக்காலத்தில் இருந்து இவர் ஆழ்விண் மின்னூட்டப் பிணைப்புக் கருவிப் படிமங்களுக்காகவும் கல்வி, அறிவியல் பரப்புரைக்காகவும் புகழ்பெற்றார். இவர் அவாய்த் தீவுகளின் மவுன கீ வான்காணகங்களிலும் கானர்த் தீவுகளின் இலா பால்மாவில் உள்ள பெருந்தொலைநோக்கிகளிலும் இருந்த தொழில்முறை வானியலாலர்களுடன் இணைந்து பணிபுரிந்தார்.[1] இவர் தன் படிமங்களை வானியல் இதழ்களில் வெளியிட்டார்[1] இவர் ஈறிலி எழுச்சிI எனும் வான் ஒளிப்படவியலையும் எழுதியுள்ளார்.[3][4]
படிம மாக்கமும் படிம மாக்கக் கையாளல் திறனும் இவருக்கு 2004 இல் பசிபிக் வானியல் கழகச் சாதனையாளர் விருதைப் பெற்றுத் தந்தன.[5][6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)