நிக்மா (Nygma) அல்லது நிக்மாட்டா (பன்மை) என்பது சில பூச்சிகளின் இறக்கைகளில் காணப்படும் விசித்திரமான அடர்த்தியான புள்ளியாகும். இவை எண்டோப்டெரிகோட்களின் இறக்கைகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இவை சில பூச்சி குழுக்களில் மட்டுமே காணப்படுகின்றன. நிக்மாட்டா கடிசு ஈக்கள், தேள் பூச்சி, இரம்ப-ஈக்கள் மற்றும் நியூரோப்டெராவின் சில குடும்பங்களில் (எ.கா. மெகாலோப்டெரா மற்றும் இதோனிடே) காணப்படுகிறது. நிக்மாட்டாவின் செயல்பாடு என்னவென்று தெரியவில்லை. இவை நரம்புகள் அல்லது சுரப்பிகளுடன் இணைக்கப்படவில்லை. இவை பொதுவாக வட்டமானவை. இவற்றினைச் சுற்றியே இரத்த நாளங்கள் செல்கின்றன. சீனாவின் காணப்பட்ட புதைபடிவ ஆசுமிலிடேயில் கூட நிக்மாட்டா காட்சியளித்தது. நிக்மாடாவின் நிலைகள் மற்றும் அமைப்பு பெரும்பாலும் இவற்றைக் கொண்டுள்ள பூச்சி சினங்களை விளக்கப் பயன்படுகின்றன.[1][2]