காவேரி நிசர்கதாமா (Kaveri Nisargadhama) என்பது ஒரு டெல்டா ஆகும். இது உள்ளூர் மக்களால் தீவு என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் குசால்நகர் அருகே காவிரி நதியால் உருவாக்கப்பட்டது.
இது குசால்நகரத்திலிருந்து மாநில நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 3 கிமீ (1.9 மைல்) மற்றும் மடிகேரியிலிருந்து 30 கிமீ (19 மைல்), மைசூரிலிருந்து 95 கிமீ (59 மைல்) மற்றும் மங்களூரிலிருந்து 167 கிமீ (104 மைல்) தொலைவில் உள்ளது. இது கர்நாடகாவின் விடுமுறை இடமாகும். [1]
இத்தீவு 64 ஏக்கர் (260,000 மீ 2) பரப்பளவைக் கொண்டுள்ளது. [2] [3] அடர்த்தியான மூங்கில் தோப்புகள், சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு பசுமையாக இருக்கும். தொங்கும் கயிறு பாலம் வழியாக இத்தீவை அணுகலாம். மான், முயல்கள், மயில்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானம் மற்றும் ஒரு தாவரவியல் பூங்கா ஒன்றுஉள்ளது.
பார்வையாளர்கள் ஆற்றின் குறுக்கே ஒரு சில ஆழமற்ற மற்றும் பாதுகாப்பான இடங்களில் தண்ணீரில் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள். யானை சவாரி மற்றும் படகு சவாரி ஆகியவை மற்ற சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றர்ன இது வனத்துறையால் நடத்தப்படும் விருந்தினர் மாளிகை மற்றும் மரத்தின் உச்சியில் மூங்கில் குடிசைகளையும் கொண்டுள்ளது.