நிடமென்டல் சுரப்பிகள் (Nidamental gland) என்பது சில அடுக்கச் செவுள் மீன்கள் (எலாசுமோபிரான்ச்கள்) மற்றும் சில மெல்லுடலிகளில் காணப்படும் உள்ளுறுப்புகளாகும். மெல்லுடலிகளில் தலைக்காலி (குறிப்பாக டெகாபோடிபார்ம்சு மற்றும் நாட்டிலசுகள்) மற்றும் வயிற்றுகாலிகளும் அடங்கும்.[1][2][3]
தலைக்காலிகளில், நிடமென்டல் சுரப்பிகள் பெரிய, இணை சுரப்பிகளாக அமைந்துள்ளன. இவை மென்மூடிக்குழியில் காணப்படுகின்றன.[4] துணை நிடாமென்டல் சுரப்பிகளும் இருக்கலாம்.[4] நிடாமென்டல் சுரப்பிகள் அடுக்குகளால் ஆனவை. இவை முட்டை ஓட்டினை உருவாக்கும் களி போன்ற பொருளைச் சுரப்பதில் ஈடுபட்டுள்ளன.[1]
கணவாய் மீனின் நிடமென்டல் சுரப்பிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உணவாக உண்ணப்படுகின்றன. கணவாய் மீன் முழு விலங்காகவோ அல்லது பகுதி உறுப்புகளாகவோ உட்கொள்ளப்படும். உதாரணமாக, தெற்கு எசுப்பானியாவில், இவை முழுவதுமாக சமைக்கப்பட்டு ஹ்யூவோஸ் டி சோகோ என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த உறுப்புகள் ஆண் கணவாய் மீனின் இனப்பெருக்க உருப்புகள் என்று ஒரு பிரபலமான கருத்து உள்ளது.[6]
↑Emig, C. C. (2009). "Phylogenetic systematics in Phoronida (Lophophorata)". Journal of Zoological Systematics and Evolutionary Research23 (3): 184–193. doi:10.1111/j.1439-0469.1985.tb00581.x.