தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | நிதின் நரேந்தி மேனன் |
பிறப்பு | 2 நவம்பர் 1983 இந்தோர், மத்தியப் பிரதேசம் |
மட்டையாட்ட நடை | வலது கை |
பங்கு | இலக்குக் கவனிப்பாளர், நடுவர் |
உறவினர்கள் | நரேந்தி மேனன் (அப்பா) |
நடுவராக | |
தேர்வு நடுவராக | 3 (2019–2020) |
ஒநாப நடுவராக | 24 (2017–2019) |
இ20ப நடுவராக | 16 (2017–2020) |
மூலம்: ESPN Cricinfo, 28 சனவரி 2020 |
நிதின் மேனன் (Nitin Menon) (பிறப்பு: நவம்பர் 2, 1983) இவர் இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இப்போது நடுவராக இருக்கிறார்.[1] இவர் மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணிக்காக விளையாடியவர். பட்டியல் அ துடுப்பாட்டம் மத்திய பிரதேசத்தை விளையாடியவர். மேலும் 2015–16 ரஞ்சி கோப்பை [2] மற்றும் ஆத்திரேலியாவில் நடந்த செல்பீல்ட் கோப்பை போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார். [3] சூன் 2020 இல், நைஜல் லோங்க்கு பதிலாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவிற்கு பதவி உயர்வு பெற்றார். [4] இவரது தந்தை நரேந்திர மேனனும் ஒரு நடுவராக இருந்தார்.
26 சனவரி 2017 அன்று இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் நடுவராக செயல்பட்டார். [5] 15 மார்ச் 2017 அன்று ஆப்கானித்தான், அயர்லாந்து இடையிலான தனது முதல் ஒருநாள் பன்னாடடுத் துடுப்பாட்டப் போட்டியில் நடுவராக செயல்பட்டார். [6]
அக்டோபர் 2018 இல் 2018 பன்னாட்ட்சு மகளிர் உலக இருபதுக்கு 20 பன்னிரண்டு ஆன்-பீல்ட் நடுவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.[7] இயன் கூல்ட் உடன் இணைந்து 2019இல் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் நடுவராக செயல்பட்டார்.