தனிநபர் தகவல் | |
---|---|
முழு பெயர் | நித்ய சிறீ சிவன் |
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | இறகுப்பந்தாட்டம் |
அணி | இந்திய இணை இறகுப்பந்தாட்ட அணி |
தற்போதி பயிற்றுவிப்பது | இல்லை |
நித்ய சிறீ சிவன் (Nithya Sre Sivan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இணை விளையாட்டு வீராங்கனையாவார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியன்று குறுகிய உயரம் கொண்டவர் வகையான எசுஎச்6 பிரிவில். கலப்பு இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் இறகுப்பந்தாட்டப் போட்டிகள் இரண்டிலும் வெண்கலம் வென்றார். [1] [2] [3]
நித்ய சிறீ 2016 ஆம் ஆண்டு வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்காக திறமையான விளையாட்டு வீரர்களுடன் இடகுபந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். [4] பின்னர் 2019 ஆம் ஆண்டில் இவர் இணை விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி அறிந்து கொண்டார். தீவிர இறகுப்பந்தாட்ட விளையாட்டின் மீது தனது கவனத்தை மாற்றி லக்னோவில் பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவின் கீழ் பயிற்சியைத் தொடங்கினார். [5]
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர் இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற இணை இறகுபந்தாட்ட பன்னாட்டு போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். [6] மே 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆசிய இளையோர் வெற்றியாளர் போட்டியில் மனாமாவில் நடந்த 1 ஆவது பகுரைன் இணை இறகுப்பந்து பன்னாட்டு வெற்றியாளர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். [7] 2022 திசம்பரில், லிமாவில் நடந்த பெரு நாட்டின் இணை இறகுப்பந்தாட்ட பன்னாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரை பெண்களுக்கான ஒற்றையர் எசுஎச்6 வகையினருக்கான இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றார். [8]