நித்யா மெக்ரா | |
---|---|
2019 இல் மும்பையில் மேட் இன் ஹெவன் திரையிடலில் நித்யா மெஹ்ரா | |
பிறப்பு | 31 சனவரி 1980 அமிருதசரசு, பஞ்சாப் |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | [வெல்ஹாம் மகளிர் பள்ளி |
பணி | திரைப்பட இயக்குனர் / நிர்வாக தயாரிப்பாளர் / எழுத்தாளர் |
அறியப்படுவது | லைப் ஆப் பை த நேம்சேக் பார் பார் தேகோ மேட் இன் ஹெவன் |
வாழ்க்கைத் துணை | கரண் கபாடியா (தி. 2015) |
நித்யா மெஹ்ரா (Nitya Mehra) என்பவர் மும்பையில் உள்ள ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு சுயாதீன இயக்குநராக ஆவதற்கு முன்பு அதாவது 2002 மற்றும் 2011 இக்கு இடையில், லக்ஷ்யா (2004) மற்றும் டான் (2006) படங்களில் பர்கான் அக்தருக்கும், ஆஸ்கார் விருது பெற்ற லைஃப் ஆஃப் பை (2012) படத்தில் ஆங் லீவுக்கும், தி நேம்சேக் (2006) மற்றும் தி ரிலக்டண்ட் ஃபண்டமெண்டலிஸ்ட் (2012) ஆகிய படங்களில் மீரா நாயருக்கும் உதவியாளராக இருந்தார். காதல் நாடகப் படமான பார் பார் டெகோ (2016) மற்றும் நெட்ஃபிக்ஸ் தொடரான மேட் இன் ஹெவன் (2019-தற்போது) ஆகியவற்றை இயக்கியதற்காக இவர் மிகவும் பிரபலமானார்.[1]
மெகரா பஞ்சாபின் அமிர்தசரசில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் ஒரு ஆடை வடிவமைப்பாளர். தேராதூனில் உள்ள உறைவிடப் பள்ளியான வெல்காம் மகளிர் பள்ளியில் கல்வி பயின்றார்.[2] பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் பயின்றார், அதன் பிறகு இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தொடர்ச்சியான படிப்புகளைப் படித்தார்.[3]
நித்யா நியூயார்க்கில் 3 ஏ.எம் என்ற படத்தில் உதவியாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவுக்குத் திரும்பும் ஆர்வத்தில் இவர் இந்தியாவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவவும் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும் தொடங்கினார். உதவி இயக்குநராக இவர் லக்சயா, தி நேம்சேக், டான், லிட்டில் ஜிசோ, தி ரெலக்டண்ட் ஃபண்டமெண்டலிஸ்ட் மற்றும் லைஃப் ஆஃப் பை போன்ற படங்களில் பணியாற்றினார். இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் இவர் பணியாற்றினார்.[4]
அந்த நேரத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ய24 என்ற நிகழ்சியின் பருவம்1 இன் இந்தியப் பதிப்பில் தான் முதல் பெரிய இயக்க வாய்ப்பைப் பெற்றார்.[5]
2016 ஆம் ஆண்டில், நித்யா தனது முதல் திரைப்படமான பார் பார் தேகோ படத்தை இயக்கினார். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் தர்மா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்ததார்.[6]
2019 ஆம் ஆண்டில், அர்ஜுன் மாத்தூர், சோபிதா துலிபாலா மற்றும் கல்கி கோய்ச்லின் நடித்த அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்பட்ட மேட் இன் ஹெவன் என்ற வலைத் தொடரை இவர் நிர்வகித்துத் தயாரித்து இயக்கினார்.[7]
அமேசான் பிரைம் வீடியோவில் 2020 இல் வெளியிடப்பட்ட இந்திய இந்தி மொழி கதைக்கோவை வலைதொடரான சந்த் முபாரக்கின் இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார். இந்த படத்திற்காக அவர் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[8]
நித்யா 2023 மேட் இன் ஹெவன் பருவம் 2 இன் குழுவில் இணைந்தார்.[9]
ஆண்டு | திரைப்படம் | குறிப்பு(கள்) |
---|---|---|
2006 | த நேம்சேக் | உதவி இயக்குநர் |
தாதா | ||
2008 | த அதர் எண்ட ஆப்த லைன் | |
லிட்டில் சீசோ | ||
2012 | லைப் ஆப் பை | |
த ரிலக்டட் பண்டமெண்டலிஸ்ட் | ||
2016 | பார் பார் தேகோ | இயக்குனர் |
2020 | இன்பாஸ் | இயக்குனர் ( சாந்த் முபாரக் ) |
† | இன்னும் வெளியிடப்படாத நிகழ்ச்சிகளைக் குறிக்கிறது |
ஆண்டு | தொலைக்காட்சி நிகழ்ச்சி | குறிப்புகள் |
---|---|---|
2013 | 24 | |
2019 | மேட் இன் ஹெவன் | பருவம் 1, இயக்குனர், 3 அத்தியாயங்கள் |
2023 | பருவம் 2 |
நித்யா மெஹ்ரா கரண் டி. கபாடியாவை மணந்தார், இந்த இணையருக்கு ஒரு மகன் உள்ளார்.[12]