நினைவெல்லாம் நித்யா

நினைவெல்லாம் நித்யா
இயக்கம்ஸ்ரீதர்
கதைஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
ஜீஜி
திலீப்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நினைவெல்லாம் நித்யா (Ninaivellam Nithya) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், முத்துராமன் மகனான கார்த்திக் உடன் ஜெமினி கணேசன் மகளான ஜீஜி இணைந்து நடித்திருந்தார். ஜீஜி நடித்த ஒரே படம் இதுவேயாகும். வர்த்தக ரீதியாக வெற்றியடையாத இப்படத்துடன் திரையுலகிலிருந்து விலகி விட்ட ஜீஜி, பின்னர் மருத்துவத் துறையில் ஈடுபட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான துறையில் மிகுந்த அளவு பணியாற்றியுள்ளார்.

வர்த்தக ரீதியாக இப்படம் வெற்றி அடையாது போயினும், இளையராஜா வின் இசையிலும், வைரமுத்து வின் வரிகளிலும் இதன் பாடல்கள் மிகுந்த பிரபலம் ஆயின.[1] "பனி விழும் மலர்வனம்", "ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்" போன்ற பாடல்கள் இன்றளவும் மேடைகளிலும், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் பாடப்பெறுகின்றன. ஹம்சநாதம் என்னும் கருநாடக இசை இராகத்தின் மீதாக அமைந்த "கன்னிப்பொண்ணு கைமேல" என்னும் பாடல் கிராமிய இசை முறைமையில் அமைந்துள்ளது அதன் தனிச் சிறப்பு.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]

இல. பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:செக்)
1 கானல் நீர் போல் எஸ். ஜானகி வைரமுத்து 04:12
2 கன்னிப் பொண்ணு மலேசியா வாசுதேவன், பி. சுசீலா 04:23
3 நீதானே எந்தன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:26
4 நினைவெல்லாம் நித்யா எஸ். பி. பாலசுப்பிரமணியம் 01:31
5 பனிவிழும் மலர்வனம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:30
6 ரோஜாவைத் தாலாட்டும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:13
7 தோளின் மேலே எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:25

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நவரச நாயகன் கார்த்திக்.. அவருடைய இடம் அவருக்கே! - நடிகர் கார்த்திக் பிறந்தநாள் ஸ்பெஷல்". இந்து தமிழ். 13 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Ninaivellam Nithya Songs". starmusiq. Archived from the original on 2013-07-19. பார்க்கப்பட்ட நாள் 2013-10-09.
  3. "Ninaivellam Nithya Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-10-09.