நிபேதிதா சென் | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தொழில் | எழுத்தாளர் |
வகை | ஊகப்புனைவு |
இணையதளம் | |
www |
நிபேதிதா சென் (Nibedita Sen) வங்காள புதின எழுத்தாளர் ஆவார். [1] இவர் ஆஸ்டவுண்டிங், நெபுலா மற்றும் ஹ்யூகோ விருதுகளுக்கான இறுதிப் போட்டியாளராக இருந்துள்ளார்.
சென் கல்கத்தாவில் பிறந்தார். [2] அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பாக இவர் "இந்தியாவில் பல ஆங்கில பட்டங்களைப் பெற்றுள்ளார்". இவர் தற்போது நியூயார்க் நகரில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் ஒரு விளையாட்டாளர் மற்றும் கலைஞர் ஆவார். [1]
சென் கிளாரியன் வெஸ்ட்டில் 2015 ஆம் ஆண்டில் [1] பட்டம் பெற்றார். மேலும் ,2017 முதல் ஊக புனைகதைத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். [3]
சிறந்த புதிய எழுத்தாளருக்கான 2020 ஆஸ்டவுண்டிங் விருதுக்கான இறுதிப் போட்டியாளராக சென் இருந்தார். "தெ எக்செர்ப்ட்ஸ் ஃபிரம் அன் அன்னோடட் பிப்லியோகிராபி ஆன் தெ விமன் ஆஃப் ரட்னபார் ஐலேண்ட்" நூலிற்காக 2020 சிறந்த சிறுகதைக்கான நெபுலா விருது மற்றும் சிறந்த சிறுகதைக்கான 2020 ஹ்யூகோ விருது ஆகிய இரண்டிற்கும் இறுதிப் போட்டியாளருக்கான பிரிவில் இடம்பெற்றார்.[4]