நியா இமாரா Nia Imara | |
---|---|
பணியிடங்கள் | ஆர்வர்டு சுமித்சோனிய வானியற்பியல் மையம் |
கல்வி கற்ற இடங்கள் | கென்யான் கல்லூரி]] கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி |
ஆய்வேடு | பெரியல் மூலக்கூற்று வளமங்களின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (2010) |
அறியப்படுவது | அறிவியலும் கலையும் |
இணையதளம் http://www.niaimara.com |
நியா இமாரா (Nia Imara) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் கலைஞரும் ஆவார். இவர் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியாவார்.
இவர் சான்பிரான்சிசுகோ வளைகுடாப் பகுதியில் வளர்ந்தார்.[1] இவர் கென்யான் கல்லூரியில் சேர்ந்து கணிதவியலிலும் இயற்பியலிலும் இளவல் பட்டம் பெற்றார்.[1] இவர் பட்ட மேற்படிப்புக்காக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சென்றார். இவர் அங்கு 2010 இல் முனைவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வானியற்பியலில் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே ஆவார்.[1] இவரது முனைவர் பட்ட ஆய்வுரை பெருமூலக்கூற்று முகில்களின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (The Formation and Evolution of Giant Molecular Clouds) என்பதாகும்.[2]
ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் வருங்காலப் புலத் தலைவர்கள் நிகழ்ச்சியின் முதல் முதுமுனைவர் பட்ட ஆய்வாளரானார்.[3] இவர் 2017 இல் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் ஜான் ஆர்வார்டு தகைமை அறிவியல் ஆய்வாளராக அமர்த்தப்பட்டார்.[4] இவர் பால்வெளிப் பொருண்மையையும் உருவாக்க வீதங்களையும் தூசு வெப்பநிலைகளையும் இணைக்கும் கணிதவியல் படிமத்தை உருவாக்கினார்.[5]
இமாரா திரைச்சீலை நெய்வன ஓவியர்.[6] இவர் 2014 இல் முதல் காதல் எனும் சொந்தக் கலைக் காட்சியரங்கினைத் திறந்தார்.[7] இவர் ஓக்லாந்தில் 2015 இல் பல தொடர்கலைக்காட்சிகளை நடத்தி, அதனால் ஓக்லாந்துக் குடும்பங்களில் நிகழ்ந்த பாலினச் சமமை மேம்பாட்டை ஆய்வு செய்தார்.[8]
இவர் பாலின மேம்பாட்டுக்காகவும்[9] ஆண்-பெண் பொதுக் கல்விக்காகவும் பாடுபட்டவர்.
{{cite thesis}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)