இனங்காட்டிகள் | |
---|---|
16469-17-3 | |
ChemSpider | 77047 |
EC number | 240-514-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 85433 |
| |
பண்புகள் | |
Nd(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 195.266 |
தோற்றம் | ரோசா நிறம்[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பிரசியோடிமியம்(III) ஐதராக்சைடு சமாரியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம்(III) ஐதராக்சைடு (Neodymium(III) hydroxide) என்பது Nd(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
அமோனியா நீரில் நியோடிமியம்(III) நைட்ரேட்டை வினைபுரியச் செய்தால் நியோடிமியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது.[2]
Nd(NO3)3 40கி/லிட்டர் அளவு எடுத்துக் கொண்டால் அமோனியா நீரை 0.50 மோல்/லிட்டர் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்; அமோனியா நீரை Nd(NO3)3 கரைசலில் நிமிடத்திற்கு 1.5 மில்லி லிட்டர் என்ற வேகத்தில் இட்டு pH அளவையும் 7.35 என்ற அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும்,பல்லெத்திலீன் கிளைக்காலை சிதறலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ≤1μm மணி அளவில் நியோடிமியம்(III) ஐதராக்சைடு தோன்றும்.[3]
ரோசா நிறத்தில் திண்மநிலையில் நியோடிமியம்(III) ஐதராக்சைடு காணப்படுகிறது.[1]
அமிலங்களுடன் வினைபுரிந்து நியோடிமியம்(III) ஐதராக்சைடு நியோடிமியம் உப்புகளை உருவாக்குகிறது.