இவர் கல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற கொல்கத்தாவில் உள்ள இசுகாட்லாந்து தேவாலய கல்லூரியிலும் , கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும் படித்தார். முதுகலைப் பட்டம் பெற்ற[1] பின்னர் இசுகாட்லாந்து தேவாலய கல்லூரியில் விரிவுரையாளராகக் கல்விப் பணியினைத் தொடங்கினார்.[2] பின்னர் ஆங்கிலப் பேராசிரியராக லக்னோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, கலைப் பள்ளியின் தலைவராகப் பதவி வகித்தார்.[3] இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 15 மே 1955 முதல் 9 அக்டோபர் 1960 வரை பணியாற்றினார்.[4]