இந்திய வான்படை அதிகாரி நிர்மல் ஜித் சிங் செக்கோன் | |
---|---|
![]() | |
பிறப்பு | லூதியானா மாவட்டம்,[1] பிரித்தானிய இந்தியா | 17 சூலை 1943
இறப்பு | 14 திசம்பர் 1971 சிறிநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா | (அகவை 28)
சார்பு | ![]() |
சேவை/ | ![]() |
சேவைக்காலம் | 1967–1971 |
தரம் | ![]() |
படைப்பிரிவு | 18-வது ஸ்குவாட்ரன் இந்திய வான்படை |
போர்கள்/யுத்தங்கள் | இந்திய-பாகிஸ்தான் போர், 1971 |
விருதுகள் | ![]() |
இந்திய வான்படை பைலட், நிர்மல் ஜித் சிங் செக்கோன் (Nirmal Jit Singh Sekhon), PVC (17 சூலை 1943 – 14 டிசம்பர் 1971) இந்திய வான்படையில், 18-வது ஸ்குவாட்ரன் அணியில் போர் விமானத்தை இயக்கும் பைலட் ஆக 1967-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர். 1971-இந்திய பாகிஸ்தான் போரின் போது நிர்மல் ஜித் சிங் செக்கோன், ஸ்ரீநகர் விமான தளத்தை காக்கும் பணியில் இருந்தார். விமான ஓடு தளத்தை பாகிஸ்தான் வான்படைகள் தாக்கத் தொடங்கியது. நிர்மல் ஜித் செக்கான் தனியொரு ஆளாக காஷ்மீர் விமான தளத்தை எதிரிகளிடமிருந்து காத்து தன் இன்னுயிரை நீத்து, வீரமரணமடைந்த நிர்மல் ஜித் சிங் செக்கோனுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் 1971-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம்]] விருது வழங்கி மரியாதை செய்தார்.[2][3]இந்திய வான்படையில் முதன் முதலில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர் நிர்மல் ஜித் சிங் செக்கோன் ஆவார்.[4]இந்திய வான்படையில் முதன் முதலில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர் நிர்மல் ஜித் சிங் செக்கோன் ஆவார்.
பாகிஸ்தானிய வான்படை அதிகாரி சலீம் பெய்க் மிர்சா தனது கட்டுரையில், போரில் நிர்மல் ஜித் சிங் செக்கோனின் வீர தீரச் செயல்களைக் குறித்துப் பாராட்டியுள்ளார். [5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)