நில தயாக்கு மொழிகள் Land Dayak Languages Bidayuh Bahasa-bahasa Dayak Darat
| ||
---|---|---|
இனம் | பிடாயூ | |
புவியியல் பரம்பல்: |
போர்னியோ சுமத்திரா | |
மொழி வகைப்பாடு: | அவுஸ்திரேலிய மலாய-பொலினீசியம் வடக்கு போர்னியோ மொழிகள் நில தயாக்கு மொழிகள் Land Dayak Languages Bidayuh | |
துணைப்பிரிவு: |
பிடா மொழி
| |
ISO 639-2 639-5: | Dayak |
நில தயாக்கு மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Dayak Darat; ஆங்கிலம்: Land Dayak Languages; சீனம்: 兰德达雅克语) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தில் ஒரு மொழிக்குழு ஆகும்.
போர்னியோவில் நில தயாக்குகள் எனும் பிடாயூ மக்கள் வாழ்கிறார்கள். அந்த பிடாயூ மக்களாலும்; மற்றும் சில இனததவராலும் பேசப்படும் இந்த நில தயாக்கு மொழிகள் 10-க்கும் மேற்பட்ட மொழிகளின் குழுமம் என அறியப்படுகிறது. மேலும் இந்த மொழிகளைத் தென்மேற்கு சுமத்திராவின் ரெஜாங் மக்களும் பேசுகிறார்கள்.
தயாக்கு எனும் சொல், புரூணை மலாய் மொழி - மெலனாவு மொழியில் இருந்து உருவானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. தயாக்கு என்றால் "உள்நாட்டு மக்கள்" என்று பொருள்படும்.
தயாக்கு மக்கள் ஒரு மொழியை மட்டும் பேசுவது இல்லை. இவர்களின் பூர்வீக மொழிகள்; நில தயாக்கு மொழிகள், மலாய் மொழி, சபகான் மொழி மற்றும் பாரிட்டோ மொழிகள் போன்ற மலாயா-பாலினேசிய மொழிகளின் வெவ்வேறு துணைக் குழுக்களைச் சேர்ந்தவையாக உள்ளன.[1][2]
தயாக்கு மக்களில் பெரும்பாலோர், அவர்களின் தாய்மொழிக்கும் கூடுதலாக, இருமொழி பேசுபவர்களாக உள்ளனர். அவர்கள் பிறந்த நாட்டைப் பொருத்து இந்தோனேசிய மொழி அல்லது மலாய் மொழிகளில் நன்றாகப் பேசக் கூடியவர்களாக உள்ளனர்.[3]
அத்துடன் போர்னியோவின் பல உள்ளூர் மொழிகள் வேறு எங்கும் பேசப்படவில்லை. போர்னியோ தீவில் சுமார் 170 உள்ளூர் மொழிகள் பேசப்படுகின்றன. அந்த உள்ளூர் மொழிகளில் சிலவற்றை சில நூறு பேர் மட்டுமே பேசுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.