![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | நிலக்கரி அமைச்சகம், புது தில்லி, இந்தியா |
ஆண்டு நிதி | ரூபாய் 770.91 கோடி (2018-19)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | https://coal.nic.in/ |
நிலக்கரி அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய மூத்த அமைச்சர் பிரகலாத ஜோஷி மற்றும் இணை அமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தான்வே ஆவர். இந்த அமைச்சகம் நாட்டின் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி வளங்களைக் கவனிக்கும் அமைச்சகங்களுள் ஒன்றாகும். நாட்டின் நிலக்கரி இருப்பிட ஆய்வையும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கையிருப்பு மேம்பாட்டையும், இதர சுற்றுச்சூழல் முக்கியத்துவ விசயங்களைக் கையாளுகிறது. இவ்வமைச்சகத்தின் கீழே நாட்டின் நிலக்கரிச் சுரங்கள் செயல்படுகின்றன. அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனம் மூலமாகவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் போன்ற துணை நிறுவனங்கள் மூலமாகவும் விலை நிர்ணயத்தையும் தீர்மானிக்கிறது. மேலும் ஆந்திர மாநிலத்திலுள்ள சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் 49% பங்குகளை இவ்வமைச்சகமும், மீதி 51% பங்குகளை தெலங்காண மாநில அரசும் கொண்டுள்ளன.[4]
நாட்டின் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியின் கையிருப்பை இவ்வமைச்சகமே தீர்மானிக்கிறது. இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதி 1961ன் படி இவ்வமைச்சகத்தின் துறைகள் உருவாக்கப்பட்டன. அதன் படி கீழ்கண்ட பணிகளை செய்கிறது.
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch; 27 திசம்பர் 2014 suggested (help)