நிலத்தடி நிக்கரி வளிமமாக்கல் அல்லது நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கல்(underground coal gasification) என்பது நிலக்கரியை நிலத்தின் அடியில் வாயுவாக்கும் தொழில்முறைச் செயல்முறை ஆகும். சுரங்கம் தோண்டப்படாத நிலக்கரி உள்ள பகுதிகளில் ஆக்சிசனேற்றிகளைப் பயன்படுத்தி வளிமம் நிலமட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இவ் வளிமமானது நிலப்பரப்பில் துளைகளிட்டு எடுக்கப்படுகிறது. இவ்வாயு எரிபொருளாகவோ ஆற்றல் உற்பத்திக்கோ பயன்படுத்தப்படலாம். வழக்கமான நிலக்கரிச் சுரங்கத்திற்கு ஒரு மாற்றாக இது முன்வைக்கப்படுகிறது.
சுற்றுச் சூழலுக்கு சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் இரண்டையுமே நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கல் முறை உருவாக்குகிறது. சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் நைதரசன் ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கிறது.[2][3] ஆனால் நிலத்தடி நீரில் நச்சுப் பொருட்கள் கலப்பை உண்டாக்கி விடுகிறது.[2][4]