நிலோத்பால் பாசு Nilotpal Basu | |
---|---|
பொதுவுடைமைக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஏப்ரல் 2018 | |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1994–2006 | |
தொகுதி | மேற்கு வங்காளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 திசம்பர் 1956 |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
மூலம்: [1] |
நிலோத்பால் பாசு (Nilotpal Basu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசுட்டு) உறுப்பினரான இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் மேற்கு வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] கிராமீன் சஞ்சார் சங்கம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். மேற்கு வங்கத்தில் மாநிலம் மற்றும் இந்திய தொடர்பாடல் நிறுவனமான பி.எசு.என்.எல் என்ற பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் ஆதரவுடன் பொது அழைப்பு அலுவலகம் திட்டத்தைத் தொடங்கியது.[2] வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பாசு சர்ச்சையில் சிக்கினார்.[3][4][5]