நிழல்கள் ரவி | |
---|---|
![]() | |
பிறப்பு | இரவிச்சந்திரன் ஷ்யாமண்ணா ஏப்ரல் 16, 1953 |
மற்ற பெயர்கள் | காகா ரவி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1980–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | விஷ்ணுப்ரியா |
நிழல்கள் ரவி (Nizhalgal Raviee) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் நிழல்கள் படத்தில் 1980 ஆம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார். இவர் 500-இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[2]
தென்னிந்தியத் திரைப்படத் துறையில் நடிகர் நிழல்கள் ரவி, நிழல்கள் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒரு காதல் கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், ஒரு பெரிய கதாநாயகனாக வரவில்லை. ஆனால் இவர் நடித்த வேதம் புதிது, நாயகன், சின்னத்தம்பி பெரியதம்பி, அண்ணாமலை, மறுபடியும், ஆசை உட்பட பல திரைப்படங்களில் சிறப்பான பாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்களில் ஓர் அன்பான இதயமுள்ள தந்தையாகவும், இரக்கமற்ற வில்லனாகவும் அல்லது ஒரு முதுகில் குத்துபவராகவும் நடித்துள்ளார். தமிழில் ஒளிபரப்பப்பட்ட கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்காக அமிதாப் பச்சனுக்கு பின்னணிக் குரல் கொடுத்தார். 1980களில் மலையாளத்தில் 25-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்தார். 80களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் இயக்குநர் கே. பாலசந்தரின் தொலைக்காட்சித் தொடரான இரயில் சினேகம் என்பதில் நடித்தார்.
அவர் கோயம்புத்தூர் பி.எஸ். ஜி கலைக்கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் ஷியாமன்னா மற்றும் டி. ராஜம்மாள் ஆகியோருக்கு ரவிச்சந்திரன் என்ற இயற்பெயருடன் பிறந்தார். அவர் விஷ்ணுப்ரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராகுல் ரவி என்ற மகன் இருக்கிறார்.
தொடர் | பாத்திரம் | தொலைக்காட்சி | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
ரயில் சினேகம் | தூர்தர்ஷன் | தமிழ் | ||
ஜன்னல் | சன் டிவி | தமிழ் | ||
தென்றல் | வேலாயுதம் | சன் டிவி | தமிழ் | |
எமர்ஜென்சி ஆக்சன் | பொதிகை தொலைக்காட்சி | தமிழ் | ||
அப்பாவுக்காக | தமிழ் | |||
காசளவு நேசம் | சன் டிவி/ராஜ் தொலைக்காட்சி | தமிழ் | ||
நல்லதோர் வீணை | தமிழ் | |||
சூர்யபுத்திரி | கலைஞர் தொலைக்காட்சி | தமிழ் | ||
அலைகள் | சன் டிவி | தமிழ் | ||
லஹரி லஹரி லஹரிலோ | ஈ டிவி | தெலுகு |
நிழல்கள் ரவி பின்னணிக் குரல் கொடுத்ததன் காரணமாக கோன் பனேகா குரோர்பதி, பருவம் 2 என்ற நிகழ்ச்சி தமிழ்ப் பேசும் சமூகத்திடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[3]