நிஹார் முகர்ஜி | |
---|---|
இந்திய சோசலிச ஒற்றுமை மையத்தின் (கம்யூனிஸ்ட்), பொதுச் செயலாளர் | |
பதவியில் 1976-2010 | |
முன்னையவர் | சிபதாஸ் கோஷ் |
பின்னவர் | ரெவாக் கோஷ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1920 டாக்கா, வங்காளம் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா |
இறப்பு | 18 பிப்ரவாி 2010 கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) |
வாழிடம் | கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
நிஹார் முகர்ஜி (Nihar Mukherjee) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய சோசலிச ஒற்றுமை மையத்தின் (கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளராக (SUCI (C)) பணியாற்றினார். அவர் 1948 இல் கட்சியின் தொடக்க உறுப்பினராவார். 1976 ல் ஷிப்தாஸ் கோஷின் மரணத்தின் பின்னர் கட்சியின் பொது செயலாளராக ஆனார். அவர் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளான பாட்டாளி வர்க்க சகாப்தத்தம் (Proletarian Era) பத்திரிக்கையின் பதிப்பாசிரியராகவும் இருந்தார். [1]
முகர்ஜி ஆரம்பகால அரசியல் வாழ்க்கையின் போது, அவர் அனுசீலன் சமித்தியின் ஒரு தலைவராக இருந்தார்.[2] அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டார். 2010 பெப்ரவரி 18 அன்று நிஹார் முகர்ஜி இதய நோயினால் இறந்தார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் விளையாட்டரங்கில் இவர் இறந்ததை நினைவுகூரும் வகையில் 2010 மார்ச் 3 அன்று கட்சி பொிய நினைவுக் கூட்டத்தை நடத்தியது.