நீட்டம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Gnetum |
இனம்: | Template:Taxonomy/GnetumG. macrostachyum
|
இருசொற் பெயரீடு | |
Gnetum macrostachyum ஜோசப் டால்ட்டன் ஹூக்கர் |
நீட்டம் (Gnetum macrostachyum) என்பது வெப்பமண்டல ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட வித்துமூடியிலி தாவர வகையை சார்ந்தது.[1] இது மற்ற வித்துமூடியிலியைப் போலல்லாமல், தனிம நாளங்களை கொண்டது.[2][3][4] இது உணவு மற்றும் நார்ச்சத்துக்கான ஆதாரமாக பயன்படுத்த அறுவடை செய்யப்படுகிறது.[5] இதன் விதைகள் மற்றும் இலைகள் உணவாக பயன்படுகிறது. இவை சிவப்பு பழங்களையும் வறுத்த பிறகு உண்ணக்கூடிய விதைகளையும் உற்பத்தி செய்கின்றன. இதன் பட்டை இழைகள் கயிறுகளை தயாரிப்பதில் பெயர் பெற்றவை.
இது பொதுவாக ஈரப்பதமான வெப்பமண்டல மழைக்காடுகள் போன்ற சூழல்களில், சிவப்பு அல்லது கருப்பு மண்ணில் உள்ள ஆறுகள் மற்றும் பொதுவாக குறைந்த உயரத்தில் வளர்கிறது. மேலும் பல்வேறு நாடுகளிலும் தீவுகளிலும் பாதுகாக்கப்படுகிறது. இது முக்கியமாக கிழக்காசியாவில் தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா மற்றும் நியூ கினி போன்ற இடங்களில் காணப்படுகின்றது.
வாழ்விட இழப்பு காரணமாக இந்த இனம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மலைச் சூழல் காடுகள் ஒரு வாழ்விடமாக அப்படியே உள்ளன. ஆனால் சுமாத்திரா மற்றும் [[சாவகத்தின் கீழ் பகுதிகளில் இந்த இனங்கள் ஆபத்தில் உள்ளன. அழிவைத் தடுக்க, பல மாதிரிப் பூங்காக்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இவை நடப்பட்டுள்ளன.