முகம்மது இப்ராகிம் Muhammad Ibrahim মুহাম্মদ ইব্রাহিম محمد ابراہیم | |
---|---|
பாக்கித்தான் சட்டத்துறை அமைச்சர் | |
பதவியில் 1958–1962 | |
குடியரசுத் தலைவர் | அயூப் கான் |
வேந்தர் (கல்வி) - தாக்கா பல்கலைக்கழகம் | |
பதவியில் 9 நவம்பர் 1956 – 27 அக்டோபர்r 1958 | |
முன்னையவர் | வால்ட்டர் ஆலன் இயென்கின்சு |
பின்னவர் | அமுதூர் ரகுமான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 1894 சாயில்துபி, சதார்பூர், பரித்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 13 அக்டோபர் 1966 | (அகவை 71–72)
தேசியம் | பாக்கித்தானியர் |
பிள்ளைகள் | சூபியா அகமத்து |
முன்னாள் மாணவர் | டாக்கா கல்லூரி |
பணி | கல்வியாளர் |
நீதிபதி முகம்மது இப்ராகிம் (Muhammad Ibrahim (justice) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கல்வியாளரும் வங்கமொழி பேசும் நீதிபதியும் ஆவார். எம் இப்ராகிம் எனப் பொதுவாக இவர் அறியப்படுகிறார். 1894 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முகம்மது இப்ராகிம் பிறந்தார். ஒரு பாக்கித்தானிய வங்காள நீதிபதியான இவர் 1956-1958 காலகட்டத்தில் டாக்கா பல்கலைக்கழகத்தின் 8ஆவது துணைவேந்தராகவும் பணியாற்றினார். [1]
இப்ராகிம் 1894 ஆம் ஆண்டில் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள சதர்பூர் உபாசிலாவின் சைல்துபி கிராமத்தில் கியாசுதீன் அகமதுக்கு மகனாகப் பிறந்தார். [2] 1916 ஆம் ஆண்டு மற்றும் 1918 ஆம் ஆண்டுகளில் முறையே பாரிசல் சில்லா பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்விலும், டாக்கா கல்லூரியில் இடைநிலைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார். பின்னர் அவர் நரேசு சந்திர சென்-குப்தாவின் வற்புறுத்தலின் கீழ் சட்டம் பயின்றார். [3] 1921 ஆம் ஆண்டில் சட்டப் பாடத்தில் இவர் சட்டப் பட்டம் பெற்றார் [2]
இப்ராகிம் 1922-1923 ஆம் ஆண்டில் பரித்பூரில் வழக்கறிஞர் பயிற்சி செய்தார், மேலும் 1924 ஆம் ஆண்டில் டாக்கா மாவட்ட வழக்கறிஞர் மன்றத்தில் சேர்ந்தார். 1924 முதல் 1943 ஆம் ஆண்டுகள் வரை டாக்கா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் 1939 ஆம் ஆண்டில் டாக்கா மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரானார் [2] 1943 ஆம் ஆண்டில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டில் இவர் டாக்கா உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். 1956 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியில் இருந்து [2] பின்னர் ஓய்வு பெற்றார்.
தேர்தல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றினார், பின்னர் டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நவம்பர் 1956 முதல் அக்டோபர் 1958 வரை பணியாற்றினார் [2]
பாக்கித்தான் சானாதிபதி அயூப் கானால் இப்ராகிம் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார் மற்றும் 1958-1962 ஆண்டுகளில் இப் பதவியில் பணியாற்றினார். [3]
இப்ராகிம் லுத்புன்னிசா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வங்காள தேசத்தின் தேசியப் பேராசிரியரான சூபியா அகமது மகளாகப் பிறந்தார்.[4]