நீரஜ் மாதவ்

நீரஜ் மாதவ்
ஆதி கபியாரே கூட்டமணியின் வெற்றி விழாவில் நீரஜ்
பிறப்புநீரஜ் மாதவ்
26 மார்ச்சு 1990 (1990-03-26) (அகவை 34)
கோழிக்கோடு, சொந்த ஊர் கண்ணூர் கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கோழிக்கோடு பல்கலைக்கழகம், திருச்சூர்
பணிநடிகர், நடன இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2013 முதல் தற்போது வரை
பெற்றோர்மருத்துவர் கே. மாதவன்
லதா மாதவன்
வாழ்க்கைத்
துணை
தீப்தி (தி. 2018)

நீரஜ் மாதவ் (Neeraj Madhav) (பிறப்பு 1990 மார்ச் 26 ) இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகரும் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப் படங்களில் பணியாற்றுகிறார். 2019 அக்டோபரில் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கிய இந்திய வலைத் தளங்களான தி ஃபேமிலி மேன் (இந்தியத் தொலைக்காட்சித் தொடர்) என்பதில் நடித்த 'மூசா ரகுமான்' என்ற பாத்திரத்திற்காக நீரஜ் மிகவும் பிரபலமானவர்.திரிஷ்யம் (2013), 1983 (2014), சப்தமாஸ்ரீ தாஸ்கராஹா (2014), ஒரு வடக்கன் செல்பி (2015), ஆதி கபியாரே கூட்டமணி (2015) ஒரு மெக்ஸிகன் அபரதா (2017),[1] போன்றத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

நீரஜின் பெற்றோரின் பூர்வீகம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பையனூர் என்பதாகும். அவர்கள் கோழிக்கோட்டின் திருவண்ணூரில் குடியேறினர். இவர் தனது பள்ளிப்படிப்பை கோழிகோடு, புனித ஜோசப் சிறுவர் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார் . பின்னர் சென்னை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து கட்புலத் தொடர்பாடலில் பட்டம் பெற்றார். பின்னர் திரிச்சூரின் நாடகம் மற்றும் நுண்கலைப் பள்ளியிலிருந்து அரங்கம் சார்பான முதுகலை பட்டம் பெற்றார். இவரது தந்தை மருத்துவர் கே. மாதவன் ஒரு கால்நடை மருத்துவர், மற்றும் அவரது தாய் லதா, ஆசிரியர் ஆவார்.

ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் பதிப்பான அமிர்தா தொலைக்காட்சியில் சூப்பர் டான்சரில் ஒரு நடனக் கலைஞருடன் இறுதிச் சுற்றுக்கு வந்தார். நீரஜ் ஒரு பயிற்சி பெற்ற பரத நாட்டியக் நடனக் கலைஞரும் ஆவார். இதை கலாமண்டலம் சரசுவதி மற்றும் அவரது மகள் அசுவதி ஆகியோரின் கீழ் கற்றுக்கொண்டார். செண்டையிலும் பயிற்சி பெற்ற இவர், கலாநிலையம் உதயன் நம்பூதிரியின் சீடராவார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

நீரஜ் தனது நீண்டகால காதலி தீப்தியை 2018 ஏப்ரல் 2, அன்று திருமணம் செய்து கொண்டார். தீப்தி தற்போது கொச்சியின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.[2] நீரஜுக்கு நவ்னீத் மாதவ் என்ற ஒரு தம்பி இருக்கிறார்.[1]

தொழில்

[தொகு]

ஒரு நடிகராக மலையாள சினிமா துறையில் ராஜ் பிரபாவதி மேனனின் பட்டி என்ற படத்தின் மூலம் நுழைந்தார். பின்னர் அவரை இயக்குநர் ஜீது ஜோசப் கவனித்தார். மேலும் அவரது திரைப்படங்கள் மெமோரிஸ் (2013 திரைப்படம்) மற்றும் திரிஷ்யம் (திரைப்படம்) ஆகியவற்றில் ஒரு பகுதியாக அழைக்கப்பட்டார். இரண்டும் மிகப்பெரிய வெற்றிகளாக மாறியது. பிந்தையது மலையாள படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இதற்கிடையில், நீரஜ் அப்ரிட் ஷைனின் 1983 மற்றும் சத்யன் அந்திகாட்டின் ஓரு இந்தியன் பிரணயகதா படத்திலும் நடித்தார் .[1]

அனில் ராதாகிருஷ்ணன் மேனனின் சப்தமாஸ்ரீ தாஸ்கராஹா - ஏழு திருடர்களின் கதை, இதில் நீரஜ் பிருத்விராஜ், அனூப் கண்ணனின் ஹோம்லி மீல்ஸ் மற்றும் அப்போதெக்கரி (திரைப்படம்) ஆகியவற்றுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்தார் .[1][3]

நடிகர்

[தொகு]

நீரஜ் அதிகாரப்பூர்வ நடன இயக்குனராக ஓரு வடக்கன் செல்பி என்றப் படத்தில் மூலமாக, வினீத் ஸ்ரீனிவாசன் எழுதிய, வேடிக்கை பாடலான "என்னே தல்லெண்டம்மவா" மூலம் அறிமுகமானார்.[4][5] 2015 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட மற்ற வெளியீடுகளில் ஜம்னா பியாரி, குஞ்சிராமாயணம், மதுரா நாரங்கா, கே.எல் .10 பாத்து, சார்லி மற்றும் ஆதி கபியாரே கூட்டமணி ஆகியவை அடங்கும்.[6]

டாம் எம்மாட்டியின் ஓரு மெக்ஸிகன் அபரதத்திலும் நீரஜ் ஒரு முக்கிய பாத்திரத்தை சித்தரித்தார். நீரஜ் தனது முதல் முக்கிய கதாபாத்திரத்தில் பிபின் சுவட்டில பிராணயம் என்ற படத்தில் நடித்தார் . இதை அறிமுக இயக்குநர் டொமின் டிசில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தில் தினசரி கூலித் தொழிலாளியான கோவிந்தன்கூட்டியை அவர் சித்தரிக்கிறார்.

திரைக்கதை எழுத்தாளர்

[தொகு]

நீரஜ் 2017 இல் லவகுசா திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமானார். மேலும் இதில் அஜு வர்கீஸுடன் தலைப்பு கதாபாத்திரங்களில் ஒன்றாகவும் நடித்தார். பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் ஓழம் படத்தில் நீரஜ் முழு நீள வேடத்தில் நடிக்கிறார்.[7]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Sathyendran, Nita (24 April 2015). "Making the right moves". தி இந்து (Thiruvananthapuram, India). http://www.thehindu.com/features/metroplus/interview-with-neeraj-madhav/article7137966.ece. 
  2. "Neeraj Madhav ties knot". https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/neeraj-madhavs-wedding-pictures-are-out/articleshow/63579384.cms. 
  3. "The Taste of Success - Deccan Chronicle".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Neeraj is now officially a choreographer". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Kochi, India). 1 March 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Neeraj-is-now-officially-a-choreographer/articleshow/46410023.cms. 
  5. "Holding a mirror to one's self". தி இந்து (Thiruvananthapuram, India). 8 January 2015. http://www.thehindu.com/features/friday-review/oru-vadakkan-selfie-starring-nivin-pauly-aju-varghese-and-neeraj-madhav/article6763791.ece. 
  6. "Neeraj Madhav on a spree". மலையாள மனோரமா (Thiruvananthapuram, India). 23 July 2015. http://english.manoramaonline.com/entertainment/interview/neeraj-madhav-on-a-spree-kl10patthu-madhura-naranga.html. 
  7. "Jeethu cast Neeraj when they met at a college". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Kochi, India). 11 February 2016. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Jeethu-cast-Neeraj-when-they-met-at-a-college/articleshow/50931844.cms.