நீரவ் ஷா | |
---|---|
பிறப்பு | 16 நவம்பர் 1974 தமிழ்நாடு, சென்னை |
பணி | ஒளிப்பதிவாளர், தொழில் முனைவோர் |
நீரவ் ஷா (Nirav Shah, பிறப்பு: 16 நவம்பர் 1974) என்பவர் ஓர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் . ஆவார். 2004 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான பைசா வசூல் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர் தமிழ், இந்தி, மலையாள மொழிகளில் பல பெரிய வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.[1][2]
பிரபல ஒளிப்பதிவாளர்களின் உதவியாளராக, பல தொலைக்காட்சி விளம்பரங்கள், இசைக் கானொளிகள், குறும்படங்களில் பணியாற்றிவந்த, நீரவ் ஷா ஒரு "முழு நீள திரைப்படத்திற்காக" சுயாதீன ஒளிப்பதிவாளராக ஆனார். 2004 பாலிவுட் திரைப்படமான பைசா வசூல் பட்டதின் வழியாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் மற்றொரு இந்தி திரைப்படமான இன்டெக்வாம் (2004) படத்தில் பணியாற்றினார். இருப்பினும், இந்தி பெருவெற்றித் திரைப்படமான தூம் (2004) தான் ஷாவை மக்களிடம் பிரபலப்படுத்தியது, பாராட்டுக்களையும், புகழையும் பெற்றுத் தந்தது.
பின்னர், ஷாவுக்கு தமிழ் திரையுலகில் இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைத்ததையடுத்து, இவர் தெற்கை நொக்கி நகர்ந்தார். 2005 இல் லிங்குசாமி இயக்கிய அதிரடி திரைப்படமான சண்டக்கோழி படத்தின் வழியாக கோலிவுட்டில் இவர் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இயக்குநர் விஷ்ணுவர்தன் இவரை அழைத்து 2005 ஆம் ஆண்டு தமிழ் குண்டர் படமான பாட்டியல் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆக்கினார். பின்னர் விஷ்ணுவர்தன் ஷாவை அவரது பின்வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் தன்னுடன் இணைத்துக்கொண்டு பணியாற்றினார், மேலும் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தமிழில் மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் வெற்றிகரமான படங்களை உருவாக்கினார்.[1][2][3][4] விஷ்ணுவர்தனின் திரைப்படங்களில் அறிந்தும் அறியாமலும் (2005), பில்லா (2007), சர்வம் (2008) ஆகியவற்றில் ஷாவின் ஒளிப்பதிவு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றன, இவர் கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் இளம் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக மாறினார்.
பின்னர் இவர் பனாராஸ் மற்றும் தூம் 2 (இரண்டும் 2006) போன்ற படங்களில் பணிபுரிவதற்கு மீண்டும் பாலிவுட் திரும்பினார். இதற்காக ஷா மீண்டும் பாராட்டுக்களைப் பெற்றார் பல விருதுகளையும் , பரிந்துரைகளையும் பெற்றார். விஜய்- நடித்த போக்கிரி (2007) படத்திற்காக பிரபுதேவாவும், இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி ஆகியோர் அறிமுகமான ஓரம் போ (2007) படத்திற்காகவும் ஒப்பந்தமானார். 2008 ஆம் ஆண்டில், தனது அடுத்த அறிபுனைத் திரைப்படமான எந்திரன் படத்தில் ஒளிப்பதிவு செய்ய பிரபல இயக்குநர் ஷங்கரால் அழைக்கப்படார். ஆனால் ஷா தன் நண்பரான விஷ்ணுவர்தனின் சர்வம் படத்திற்கு ஒளிப்பதவு செய்ய வாக்களிததிருந்ததால் அவரது அழைப்பை நிராகரிக்க வேண்டியிருந்தது. இவர் ஏ. எல். விஜய் இயக்கிய மதரசபட்டினம், மீண்டும் பிரபுதேவாவுடன் போக்கிரியின் இந்தி மறு ஆக்கமான, வாண்டட் போன்ற படங்களில் பணிபுரிந்தார்.
2009 சூலையில், ஷா விரைவில் நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்குவத அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.[5] தவிர, ஷா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட படப்பிடிப்பு வளாகத்தை உருவாக்கிவருகிறார். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின், பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது, இதன் மதிப்பு சுமார் ரூ. 100 கோடி.[6][7][8]
இவரது மூன்று படங்கள் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அவை பனாரஸ் (இந்தி), பட்டியல் (தமிழ்), தூம் 2 (இந்தி) ஆகியவை ஆகும். பில்லா (தமிழ்) படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார்.
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்