நீரா தேசாய் | |
---|---|
பிறப்பு | 1925 |
இறப்பு | 25 சூன் 2009 மும்பை, இந்தியா | (அகவை 84)
தேசியம் | இந்தியா |
பணி | கல்வியாளர் |
அறியப்படுவது | மகளிர் ஆய்வுகள் முன்னணியில் இருந்தவர், கல்வியாளர், சமூக ஆர்வலர். |
வாழ்க்கைத் துணை | அக்சய் ராமன்லால் தேசாய் (தி. 1947) |
பிள்ளைகள் | மிகிர் தேசாய் |
கல்விப் பின்னணி | |
ஆய்வு | பத்தொன்பதாம் நூற்றாண்டில் குஜராத்தி சமூகம்: சமூக மாற்றத்தின் பகுப்பாய்வு (1965) |
முனைவர் பட்ட நெறியாளர் | ஐ. பி. தேசாய் |
கல்விப் பணி | |
நீரா தேசாய் (Neera Desai) (1925 - 25 சூன் 2009) இந்தியாவில் மகளிர் ஆய்வுகளின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். மேலும் பேராசிரியர், ஆராய்ச்சியாளர், கல்வியாளர், அரசியல் ஆர்வலர் மற்றும் சமூக சேவகர் என இவர் செய்த பங்களிப்புகளால் குறிப்பிடத்தக்கவர். [1] 1974ஆம் ஆண்டில் மகளிர் ஆய்வுகளுக்கான ஆராய்ச்சி மையம் மற்றும் ஊரக வளர்ச்சி மையத்தை முதன்முதலில் நிறுவினார். இவர் 1954இல் எஸ்.என்.டி.டி மகளிர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு பேராசிரியராகவும் சமூகவியல் துறைத் தலைவராகவும் (முதுகலை பட்டதாரி) பல்வேறு ஆளும் குழுக்களில் ஒரு பகுதியாக இருந்தார். [2]
நீரா தேசாய் 1925ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டு அதை ஆதரித்த ஓர் குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். இந்திரா காந்தி நிறுவிய வானர சேனாவின் (குரங்கு படைப்பிரிவு) ஒரு பகுதியாக சிறு வயதிலேயே பள்ளி மாணவியாக சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். இப்பிரிவு இரகசிய அரசியல் செய்திகளை கொண்டு செல்வதையும், தடை செய்யப்பட்ட வெளியீடுகளை புழக்கத்திற்குக் கொண்டு செல்வதையும் பணியாக மேற்கொண்டது. [3] நீரா, பிரம்மஞான சபை சித்தாந்தத்தில் நிறுவப்பட்ட இணை கல்வி நிறுவனமான கூட்டாளர் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். இவர் 1942 இல் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் விரைவில் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய பின்னர் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்க முறையான கல்வியைக் கைவிட்டார். நீரா 1947இல் சக சமூகவியலாளரான அக்சய் ராமன்லால் தேசாயை மண்ந்தார். [4] இறுதியில் தனது படிப்பை முடித்த தேசாய், இந்திய சுதந்திரத்திற்குப் பின் தனது முதுகலை படிப்பை முடித்தார். இவரது ஆய்வறிக்கை நவீன இந்தியாவில் பெண்கள் மீது கவனம் செலுத்தியது (பக்தி இயக்கத்தில் பெண்களின் பகுப்பாய்வு) இது பின்னர் 1957இல் வெளியிடப்பட்டது. [5]
தேசாய் 25 சூன் 2009 அன்று மும்பையில் காலமானார். [6]
சமூகவியல், வரலாறு, பெண்ணியல் ஆகிய தலைப்புகளில் ஆங்கிலம் மற்றும் குஜராத்தி இரண்டிலும் எழுதியுள்ளார். [7] இவரது புத்தகங்களில் பின்வருவன அடங்கும்:
{{cite web}}
: Missing or empty |url=
(help)