நீர் அறிவியலும் தொழினுட்பமும் Water Science and Technology | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Water Sci. Technol. |
துறை | நீரியல், நீராதாரங்கள் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | வுல்ப்கேங் ராச் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | ஐ டபுள்யு ஏ வெளியீடு |
வரலாறு | 1969-முதல் |
வெளியீட்டு இடைவெளி: | மாதந்தோறும் |
தாக்க காரணி | 1.638 (2021) |
குறியிடல் | |
ISSN | 0273-1223 |
LCCN | 82645900 |
CODEN | WSTED4 |
OCLC | 7004034 |
இணைப்புகள் | |
நீர் அறிவியலும் தொழினுட்பமும் (Water Science and Technology) என்பது நீரின் தரத்தை நிர்வகிப்பதற்கான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு மாதாந்திர சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும். இது 1969இல் நிறுவப்பட்டது மற்றும் ஐ டபுள்யு ஏ வெளியீட்டாரால் வெளியிடப்படுகிறது. இந்த ஆய்விதழின் தலைமை ஆசிரியர் வொல்ப்காங் ரவுச் (இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம்) ஆவார்.
நீர் அறிவியலும் தொழினுட்பமும் ஆய்விதழ் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் தர மேலாண்மை பற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுகிறது. மாசுபடுத்தும் மற்றும் அபாயகரமான கழிவுகளை நிர்வகித்தல், நீர்நிலைகளில் மாசுபாட்டின் விளைவுகள் மற்றும் தாக்கம் மற்றும் நீரின் தரம் மற்றும் மறுபயன்பாட்டின் கொள்கை மற்றும் மூலோபாயம் ஆகியவையும் இதில் அடங்கும்.
விரிவாக்கப்பட்ட, தற்போதைய உள்ளடக்கங்கள்/வேளாண்மை, உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், தற்போதைய பொருளடக்கம்/பொறியியல், கணினி மற்றும் தொழில்நுட்பம், பயாஸிஸ் முன்னோட்டங்கள்,[1] எல்செவியர் பயோபேஸ் மற்றும் ஸ்கோபஸ் ஆகியவற்றில் ஆய்வுச்சுருக்கங்கள் குறியிடப்பட்டுள்ளன.[2]
நீர் அறிவியலும் தொழினுட்பமும் சந்தாவுக்குத் திறந்த அணுகல் (எஸ் 2 ஓ) வழியாக மாறியுள்ளது. அதாவது கட்டுரை ஆசிரியர்கள் தங்கள் நிறுவனம் சந்தாதாரர் நிறுவனமாக இருந்தால், அவர்களின் பணிகளைப் பொதுமக்களுக்கு அணுக அனுமதிக்கக் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.