நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் (பிறப்பு: ஏப்ரல் 26, 1938),[1] தமிழ்நாட்டில் கன்னியாகுமரியினைச் சேர்ந்த ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.[2][3][4][5][6][7]. இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.
நீல பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 1938 ஏப்ரல் 26 ஆம் நாள் நீலகண்டப்பிள்ளை - சானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[1]
நீல பத்மநாபன் நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார்.[8] கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் கல்வி ஆண்டுகளில் இயற்பியல் பயின்று அறிவியல் இளவர் பட்டம் பெற்றார்.[8] பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் அறிவியல் இளவர் பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றார்.[1]
நீல பத்மநாபன் கல்லூரியில் பயிலும்பொழுதே, கேரள பணியாளர் தேர்வாணையத் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருந்தார். எனவே கல்லூரிக் கல்வி முடிந்ததும் திருச்சூரில் அரசு அலுவலகம் ஒன்றில் சில காலம் பணியாற்றினார். தந்தை வற்புறுத்தலினால் அவ்வேலையைத் துறந்து பொறியியல் படிக்கச் சென்றார்.[8]
1963ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் (Junior Engineer) பணியிற் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து 1993 ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக (Deputy Cheif Engineer) பணி ஓய்வு பெற்றார்.[1]
நீல பத்மநாபன் கிருட்டிணம்மாள் என்பவரை மணந்து சானகி, உமா, நீலகண்டன், கவிதா என்னும் நான்கு மக்களை ஈன்றார்.[1]
"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்" என்று நீல பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு.
வரிசை எண் | ஆண்டு | நூலின் பெயர் | புதினம் | பதிப்பகம் | குறிப்பு |
01 | 1968 | தலைமுறைகள் | 1. தலைமுறைகள் | ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில் | |
02 | 1975 | பள்ளிகொண்டபுரம் | 2. பள்ளிகொண்டபுரம் | வாசகர் வட்டம், சென்னை. | |
03 | 1973 | பைல்கள் | 3. பைல்கள் | ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில் | |
04 | 1975 | உறவுகள் | 4. உறவுகள் | ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில் | |
05 | 1976 | மின் உலகம் | 5. மின் உலகம் | ||
06 | 1978 | நேற்று வந்தவன் | 6. நேற்று வந்தவன் | ||
07 | 1980 | உதய தாரகை | 7. உதய தாரகை | ||
08 | 1980 | வட்டத்தின் வெளியே | 8. வட்டத்தின் வெளியே | ||
09 | 1981 | பகவதி கோயில் தெரு | 9. பகவதி கோயில் தெரு | ||
10 | 1985 | போதையில் கரைந்தவர்கள் | 10. போதையில் கரைந்தவர்கள் 11. தீ தீ 12. முறிவுகள் |
||
11 | 1987 | தேரோடும் வீதி | 13. தேரோடும் வீதி | தன்வரலாற்றுப் புதினம் | |
12 | 1991 | பாவம் செய்யாதவர்கள் | 14. பாவம் செய்யாதவர்கள் | ||
13 | 1994 | வெள்ளம் | 15. வெள்ளம் | ||
14 | 1995 | கூண்டினுள் பட்சிகள் | 16. கூண்டினுள் பட்சிகள் | ||
15 | 1997 | யாத்திரை அனுபவங்கள் சமர் | 17. யாத்திரை 18. அனுபவங்கள் 19. சமர் |
முத்துப்பதிப்பகம், மதுரை | |
16 | 2005 | இலை உதிர் காலம் | 20. இலை உதிர் காலம் | சாதிக்யா அகாதெமி விருது பெற்றது. |
2004 ஆம் ஆண்டில் மேற்கண்ட அனைத்துப் புதினங்களும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் நாவல்கள் என்னும் தலைப்பில் வெளிவந்தது.
வரிசை எண் | ஆண்டு | நூலின் பெயர் | இடம்பெற்றுள்ள சிறுகதைகள் | பதிப்பகம் |
01 | 1969 | மோகம் முப்பது ஆண்டு | 11 சிறுகதைகள் | |
02 | 1972 | சண்டையும் சமாதானமும் | 11 சிறுகதைகள் | |
03 | 1974 | மூன்றாவது நாள் | 11 சிறுகதைகள் | |
04 | 1978 | இரண்டாவது முகம் | 19 சிறுகதைகள் | |
05 | 1978 | நாகம்மாவா? | 15 சிறுகதைகள் | முத்துப்பதிப்பகம், மதுரை |
06 | 1978 | சிறகடிகள் | 13 சிறுகதைகள் | |
07 | 1985 | சத்தியத்தின் சந்நிதியில் | 15 சிறுகதைகள் | |
08 | 1988 | வான வீதியில் | 18 சிறுகதைகள் | |
09 | 1998 | அவரவர் அந்தரங்கம் | 11 சிறுகதைகள் | |
10 | 2008 | பிறவிப் பெருங்கடல் | ||
11 | 2012 | கொட்டாரம் | என்னைப்போல் இருவர் ரெளத்திரம் நொண்டிப் புறா பூஜை அறை பகை கொட்டாரம் |
வானதி பதிப்பகம், சென்னை |
2000 ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபன் கதைகள் என்னும் பெயரில் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது.
வரிசை எண் | ஆண்டு | நூலின் பெயர் | இடம்பெற்றுள்ள கவிதைகள் | பதிப்பகம் |
01 | 1975 | நீல பத்மநாபன் கவிதைகள் | எழுத்து, சென்னை | |
02 | 1984 | நா காக்க | ||
03 | 1993 | பெயரிலென்ன |
2003ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் 148 கவிதைகள் என்னும் தலைப்பில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
வரிசை எண் | ஆண்டு | நூலின் பெயர் | இடம்பெற்றுள்ள கட்டுரைகள் | பதிப்பகம் |
01 | 1978 | சிதறிய சிந்தனைகள் | 17 கட்டுரைகள் | அகரம், சிவகங்கை |
02 | 1988 | இலக்கியப் பார்வைகள் | 13 கட்டுரைகள் | அமிழ்தம் பதிப்பகம், வேலூர் |
03 | 1991 | சமூகச் சிந்தனை | 18 கட்டுரைகள் | அமிழ்தம் பதிப்பகம், வேலூர் |
04 | 1993 | யாரிடமும் பகையின்றி | 21 கட்டுரைகள் | அமிழ்தம் பதிப்பகம், வேலூர் |
05 | 1997 | வாழ்வும் இலக்கியமும் | 14 கட்டுரைகள் | அமிழ்தம் பதிப்பகம், வேலூர் |
06 | 2001 | நவீன இலக்கியம் - சில சிந்தனைகள் | 18 கட்டுரைகள் | அமிழ்தம் பதிப்பகம், வேலூர் |
07 | 2003 | இன்றைய இலக்கியச் செல்நெறிகள் | 30 கட்டுரைகள் | இராசராசன் பதிப்பகம், சென்னை 17 |
08 | 2006 | ஐயப்ப பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும் | விருட்சம், சென்னை | |
09 | 2008 | உணர்வுகள் சிந்தனைகள் | 137 கட்டுரைகள் | நீயு செஞ்சுரி புக் அவுசு, சென்னை |
10 | 2010 | பார்வைகள் மறுபார்வைகள் |
2005 ஆம் ஆண்டு வரை இவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் கட்டுரைகள் என்னும் தலைப்பில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
வரிசை எண் | ஆண்டு | நூலின் பெயர் | இடம்பெற்றுள்ள சிறுகதைகள் | பதிப்பகம் |
01 | 1980 | கதைகள் இருபது | இருபது கதைகள் | கரண்ட் புக்சு, கோட்டயம் |
02 | 1987 | எறும்புகள் | இருபது கதைகள் | கரண்ட் புக்சு, கோட்டயம் |
03 | 1997 | அர்கண்ட் கோனில் | இருபது கதைகள் | கரண்ட் புக்சு, கோட்டயம் |
04 | 2003 | வேறத்தவர் | 23 கதைகள் | கரண்ட் புக்சு, கோட்டயம் |