தனித் தகவல் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 2 மே 1995 கிழக்கு இம்பால், மணிப்பூர், இந்தியா | ||||||||||||||||||||||||
உயரம் | 1.63 மீ[1] | ||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | நடுக்களம் | ||||||||||||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||||||||||||
2017– | இந்தியா | 29 | (1) | ||||||||||||||||||||||
பதக்க சாதனை
| |||||||||||||||||||||||||
Last updated on: 27 பிப்ரவரி 2019 |
நீலகண்ட சர்மா (Nilakanta Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். சாங்லக்பம் நீலகண்டா, நீலகண்டா சாங்லக்பம் என்ற பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். 1995 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். நீலகண்டா இந்திய தேசிய அணிக்கு நடுக்கள வீரராக விளையாடி வருகிறார். டோக்கியோ 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.
நீலகண்டா 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் வளைகோல் பந்தாட்ட இளையோர் உலகக் கோப்பையில் போட்டியிட்ட இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[2]
கிழக்கு இம்பாலில் உள்ள கோந்தா அகலூப் மகா லெய்காயில் இருந்து வந்த நீலகண்டா 2003 ஆம் ஆண்டு முதல் வளைகோல் பந்தாட்டத்தை விளையாடத் தொடங்கினார். போபால் வளைகோல் அகாடமிக்கு 2011 ஆம் ஆன்டு மாறும்போது வரை இவர் மணிப்பூரின் வளைகோல் அகாடமிக்காக விளையாடினார். இவர் 2014 ஆம் ஆன்டு நடைபெற்ற சுல்தான் சூலார் கோப்பையின் தேசிய இளையோர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இந்திய கூட்டிணைவு வளைகோல் பந்தாட்டப் போட்டியில் தபாங் மும்பை அணிக்காக விளையாடினார்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)