என். சிறீராம் | |
---|---|
பிறப்பு | நீலகண்ட ஸ்ரீராம் திசம்பர் 15, 1889 தஞ்சாவூர், தமிழ்நாடு |
இறப்பு | ஏப்ரல் 8, 1973 சென்னை, தமிழ்நாடு | (அகவை 83)
பணி | விடுதலைக் கட்டுநர் |
பிள்ளைகள் | ராதா பர்னியர் |
நீலகண்ட ஸ்ரீராம் (Nilakanta Sri Ram, திசம்பர் 15, 1889 - ஏப்ரல் 8, 1973) இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். இருபது ஆண்டு காலம் இவர் விடுதலைக் கட்டுநர் ஆகவும், பிரம்மஞானியாகவும் அடையார் பிரம்மஞான சபையின் தலைவராகவும் இருந்தார்.
இவர் தனது தொடக்க காலங்களில், அன்னி பெசண்ட் அம்மையாரின் கீழ் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் மதனப்பள்ளியில் உள்ள பெசன்ட் இறையியல் கல்லூரியிலும், பெங்களூரில் உள்ள தேசியப் பள்ளியிலும், சென்னையில் இந்திய தேசியப் பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக இருந்தார்.
பிரம்மஞான சபையில் இவர் பணியாற்றிய இருபது ஆண்டுகளில் பல சிறப்பான மாற்றங்களைக் கழகப் பணிகளிலும், அங்கு பணியாற்றிய பணியாளர்கள் மத்தியில் அவர்கள் சபையில் செயல்படும் முறைகளிலும் பெருமளவு மாற்றத்தைக் கொண்டு வந்தார். இவரது சாதனை உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது; ஏனெனில் மனித ஜீவியத்தைத் திருவுறுமாற்றுவதற்கான பாதைகள் சூட்சுமமாக மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. இவரது பணிக்காலத்தில் மட்டுமே மனித ஜீவியத்தைத் திருவுறுமாற்றுவதற்கான பாதைகள் சீரிய நெறிமுறைகளாக வெளியிடப்பட்டது. தியோசாபிகல் கழகத்தின் நிறுவனத் தலைவரான கலொனல் ஓல்காட்டுடன் கலந்து ஆலோசித்த கடைசி தலைவராகவும் திகழ்ந்தவர் நீலகண்ட ஸ்ரீராம் ஆவார். கழகத்தின் மூலநோக்கங்களை வரலாற்னேர்பாகவும், பணிநிமித்தமாகவும் மட்டுமின்றி ஆன்மீகமாக அனைவரிடமும் புரியவைத்த பெருமை இவரையே சாரும். 1953ல் அடையாறு தியோசாபிகல் கழகத்தின் தலைவராகச் செயல்பட்ட இவர் 1973ல் இயற்கை எய்தும்வரை அப்பணியில் தொடர்ந்தார். அப்போது இலீ தெட்ராயிட் குமைனின்(Le Droit Humain) உறுப்பினராகவும் இவர் திகழ்ந்தார். இவரது மகள் இராதா பர்னியர் 1980 ஆம் ஆண்டு முதல் 2013 வரை அடையாறு தியோஸ்சிக்கல் கழகத்தின் ஏழாவது தலைவராக இருந்தார்.