நீலகிரி கெளிறு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கெமிபாக்ரசு
|
இனம்: | கெ. பங்டேட்டசு
|
இருசொற் பெயரீடு | |
கெமிபாக்ரசு பங்டேட்டசு (ஜெர்டன், 1849) | |
வேறு பெயர்கள் | |
மிசுடசு மேடெலி (நான் ராசெல், 1964)[2] |
கெமிபாக்ரசு பங்டேட்டசு (Hemibagrus punctatus)[3] அல்லது நீலகிரி கெளிறு என்பது பக்ரிடே குடும்பத்தில் உள்ள ஒரு மீன் சிற்றினம் ஆகும். இது முதன்முதலில் 1849-இல் ஜெர்டனால் விவரிக்கப்பட்டது.[4] இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இவற்றில், காவேரி ஆற்றில் மட்டுமே இந்த சிற்றினம் காணப்படுகிறது. கிருஷ்ணா ஆற்றில் காணப்படுவது கெ. மைடெல்லி ஆக இருக்கலாம். இருப்பினும், மேற்கே பாயும் பாரதப்புழா ஆற்றில் காணப்படும் மீனும் இதில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.[5] இந்த சிற்றினத்தின் கடைசி பதிவு 1998-இல் இருந்தது. மேலும் இதன் எண்ணிக்கையின் வீழ்ச்சி 100% சந்தித்திருக்கலாம். எனவே, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்த சிற்றினத்தை மிக அருகிய இனமாக (ஒருவேளை அழிந்துவிட்டதாக) வகைப்படுத்துகிறது. அதிகப்படியான வண்டல் மண், அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் அணை கட்டுதல் ஆகியவற்றால் வாழ்விட சீரழிவால் இது அச்சுறுத்தப்படுகிறது.[1] இருப்பினும், 2011 மற்றும் 2012க்கு இடையில் மீனவர்களால் பிடிபட்ட பல மாதிரிகள் இந்த சிற்றினத்தைச் சேர்ந்தவையாக உள்ளூர் மீனவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில், இந்த சிற்றினத்தின் மிதமான எண்ணிக்கையில் இருக்கலாம்.[5]
இந்த சிற்றினத்தின் கீழ் வாழ்க்கை அட்டவணையில் எவ்வித துணையினங்கள் எதுவும் பட்டியலிடப்படவில்லை.[4]