நீலமலைத் திருடன் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | சாண்டோ சின்னப்பா தேவர் (தேவர் பிலிம்ஸ்) |
கதை | எஸ். அய்யா பிள்ளை |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரஞ்சன் எம். கே. ராதா டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு ஈ. ஆர். சகாதேவன் ஸ்ரீராம் அஞ்சலி தேவி ஈ. வி. சரோஜா பி. கண்ணாம்பா |
வெளியீடு | செப்டம்பர் 20, 1957 |
நீளம் | 15247 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீலமலைத் திருடன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்திற்கு கதை உரையாடலை எஸ். அய்யய்யா பிள்ளை எழுத, எம். ஏ. திருமுகம் இயக்கி, படத்தொகுப்பு செய்ய, சாண்டோ சின்னப்பா தேவரால் தயாரிக்கபட்டது. இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். கே. ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
நீலமலைத் திருடன் முதலில் ம. கோ. இராமச்சந்திரனைக் கொண்டு படமாக்கத் திட்டமிடப்பட்டது. அதற்காக அவருக்கு ஏற்றவாறு திரைக்கதை வடிவமைக்கப்பட்டது. ஆனால் இராமச்சந்திரன் மற்ற படங்களின் பணிகளில் தீவிரமாக இருந்திதால் இப்படத்திற்கு அவரால் நாட்களை ஒதுக்க இயலவில்லை. எனவே, இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் ரஞ்சன் நடித்தார். இப்படம் 20 செப்டம்பர் 1957 இல் வெளியாகி வெற்றி பெற்றது.
தயாரிப்பாளர் சாண்டோ எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தனது நெருங்கிய நண்பரான ம. கோ. இராமச்சந்திரனை வைத்து நீலமலைத் திருடன் படத்தைத் தயாரிக்க விரும்பினார். மேலும் அருக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைக்கப்பட்டது. ஆனால் ம.கோ.இரா அவரது சொந்தப் படமான நாடோடி மன்னன் (1958) உட்பட வேறு பல படங்களில் தீவிரமாக பணியாற்றிவந்ததால் இப்படத்திற்கு நாட்களை ஒதுக்கவில்லை. இதனால் தேவர் இராமச்சந்திரனினை திகைப்புக்கு ஆழ்த்தும் விதமாக ஆர். ரஞ்சனை நாயகனாக ஒப்பந்தம் செய்தார்.[4][5] இத்திரைப்படத்தை எஸ். அய்யய்யா பிள்ளை எழுத, தேவரின் சகோதரர் எம். ஏ. திருமுகம் இயக்கி படத்தொகுப்பையும் மேற்கொண்டார். படத்திற்கான ஒளிப்பதிவை வி. என். ரெட்டி தேற்கொள்ள, சி. வி. மூர்த்தி உதவியாளராக இருந்தார். படத்தில் இக்பால் என்ற குதிரையும், டைகர் என்ற நாயும் முக்கிய பாத்திரத்தில் பயன்படுத்தப்பட்டன.[5]
இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைக்க, பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி, புரட்சிதாசன் ஆகியோர் எழுதினர்.[6][7] படத்தில் இடம்பெற்ற "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" பாடலானது "வாழ்க்கையின் தத்துவத்தையும், தாழ்த்தப்பட்டோருக்கு உதவுவதன் முக்கியத்துவத்தையும், வில்லன்களை அழிப்பதன் முக்கியத்துவத்தையும்" அடிக்கோடிட்டுக் காட்டியதாக அமைந்தது. இப்பாடல் பிரபலமடைந்தது, மேலும் தமிழ் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்படுகிறது.[5]
பாடல் | பாடகர் | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"சித்திரை மாத நிலவு" | ஜி. கஸ்தூரி | புரட்சிதாசன் | 02:18 |
"கொஞ்சும் மொழி பெண்களுக்கு" | ஜிக்கி | அ. மருதகாசி | 03:28 |
"வெத்தலைப் பாக்கு" | எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா | தஞ்சை ஆர். இராமையாதாஸ் | 02:27 |
"சத்தியமே லட்சியமாய்" | டி. எம். சௌந்தரராஜன் | அ. மருதகாசி | 03:39 |
"உள்ளம் கொள்ளை" | ஜிக்கி | அ. மருதகாசி | 03:59 |
"ஏங்கி ஏங்கி" | ஜிக்கி | தஞ்சை ஆர். இராமையாதாஸ் | 03:21 |
"கண்ணாலம்" (ஒண்ணுக்கு ரெண்டாச்சி) | எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா | அ. மருதகாசி | 02:03 |
"சிரிக்கிறான் முறைக்கிறான்" | டி. எம். சௌந்தரராஜன், ஜிக்கி | தஞ்சை ஆர். இராமையாதாஸ் | 04:32 |
நீலமலைத் திருடன் 20 செப்டம்பர் 1957,[8] அன்று வெளியாகி வெற்றி பெற்றது. வரலாற்றாசிரியர் ராண்டார் கைன் கூற்றுப்படி, ராபின் ஹூட்-இனால் ஈர்க்கப்பட்ட ரஞ்சனின் நடிப்பு ஒரு ஒரு குறிப்பிட்ட காரணியாக உள்ளது என்றார்.[5] கல்கியின் ஜாம்பவான் படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்தார், ரஞ்சனின் நடிப்பு மற்றும் கதையில் உள்ள பல ஓட்டைகளை விமர்சித்தார்.[3]
இத்திரைப்படம் தெலுங்கில் கொண்டவேட்டி தொங்கா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1958 இல் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் கன்டாசாலா பாடிய பாடலான சாகசமே ஜீவிதபு பாடரா என்பது புகழ்பெற்றது. தெலுங்கு பதிப்பிற்கு ஸ்ரீராம் மெர்ச்சன்ட் இசையமைத்தார்.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)