நீலமாதா புராணம் (Nilamata Purana), காஷ்மீர் மகாத்மியம் என்றும் அழைக்கப்படும் [1] 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரையிலான காஷ்மீரின் வரலாறு, புவியியல், மதம் மற்றும் நாட்டுப்புறவியல் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள ஒன்றாகும். [2] கல்கணர் இதனை தனது வரலாற்றின் ஆதாரங்களில் ஒன்றாகப் பயன்படுத்த்யுள்ளார்.
இராஜதரங்கிணி 'காஷ்மீரின்' அரசியல் வரலாற்றின் கண்ணோட்டத்தில் முக்கியமானதாக இருந்தது. ஆனாலும் நீலமாதாவும் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என அறிஞர் வேத் குமாரி கய் . இதன் விமர்சன பதிப்பு 1924 இல் வெளியிடப்பட்டது.[3] இது நவீனகால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கோரசன், தஜிகிஸ்தான், உலகின் நவீன தார்திக் பிராந்தியங்களின் நவீன கால பகுதிகளை உள்ளடக்கிய காஷ்மீரின் தேசிய காவியமாகும்.[4]
இது காஷ்மீரின் புனித இடங்கள் மற்றும் புராணக்கதைகள் பற்றிய தகவல்களின் உண்மையான சுரங்கம் என செர்மனி அறிஞர் ஜார்ஜ் புஃலர் கூறுகிறார். இது பண்டைய காஷ்மீரின் கலாச்சார அரசியல் வாழ்க்கையின் மதிப்புமிக்க ஆதாரமாகவும் உள்ளது. சதீசர் ஏரியின் கதை, காசியபருக்கும் நாகர்களுக்கும் இடையிலான போர் மற்றும் கோனந்தா மற்றும் ராணி யசோமதி ஆகியோரின் வரலாற்று பெயர்களைக் கொண்ட பிற புராணக் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஏரியைப் பற்றிய புராணக்கதை கல்கணரின் இராஜதரங்கினி, இந்தியாவின் ஆரம்பகால பௌத்த பள்ளிகளில் ஒன்றான மூல மூலசர்வஸ்திவாதின் பிரிவின் சீன வினயா மற்றும் சுவான்சாங்கின் பயணங்களிலும் காணப்படுகிறது.[5][6][7]
A Mahatmya was a text that extolled the claims of particular area to a high spot in the list of sacred places.