நீலம் கிளர்

நோலம் கிளர்
Neelam Kler
பிறப்புசிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா
பணிபிறந்த குழந்தை மருத்துவம், குழந்தை மருத்துவம்
விருதுகள்பத்ம பூசண்

நீலம் கிளர் (Neelam Kler) இந்தியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை மருத்துவர் ஆவார் ,புதியதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை மற்றும் காற்றோட்டம் குறித்த முன்னோடி வேலைக்கு பெயர் பெற்றவராக புகழ் பெற்றார். [1] மிகச் சிறிய குறைப்பிரசவக் குழந்தைகளின் (1000 கிராமுக்குக் குறைவான) உயிர்வாழும் விகிதத்தை 90 சதவிகிதமாக உயர்த்துவதற்காக பிறந்த குழந்தைப் பராமரிப்பை வளர்த்த பெருமைக்குரியவராக [2] நன்கு அறியப்படுகிறார். இந்திய அரசு மருத்துவம் மற்றும் புதியதாய்ப் பிறந்த குழந்தைகள் சார்ந்த துறைகளுக்கான சேவைகளுக்காக 2014 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூசண் விருது வழங்கி கௌரவித்தது. [3]

சுயசரிதை

[தொகு]

நீலம் கிளர் இந்தியாவின் சம்மு -காசுமீர் மாநிலத்தில் உள்ள சிறீரீநகரில் பிறந்தார். மேலும் சிறீநகரில் உள்ள பிரசன்டேசன் கன்னி மடப் பள்ளியில் இவர் தனது பள்ளிப் படிப்பைப் பெற்றார். [4] மருத்துவத் தொழிலைத் தேர்ந்தெடுத்த இவர், சண்டிகரின் முதுகலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குழந்தை மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். புதியதாகப் பிறந்த குழந்தைகளின் சிகிச்சைக்காக மேலும் கூட்டுதலாகப் பயிற்சி பெறுவதற்காக அங்கு படிப்பைத் தொடர்ந்தார். பின்னர், டென்மார்க்கு நாட்டின் கோபனேகனுக்குச் சென்று கோபனேகன் பல்கலைக்கழகத்தில் புதியதாகப் பிறந்த குழந்தைகளின் சிகிச்சைக்காக மேலும் மேம்பட்ட ஆய்வுகளுக்காகப் படிக்கச் சென்றார். [5]

தொழில்

[தொகு]

கோபனேகனிலிருந்து திரும்பிய பிறகு, கிளர் தனது தொழில் வாழ்க்கையை இந்தியாவில் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று புதுதில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் [4] பணியில் சேர்ந்தார். 26 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய கிளர் அம் மருத்துவமனையில் புதியதாய் பிறந்த குழந்தைகள் துறையைத் தொடங்கினார். தற்போது அங்கு தலைவர் பதவியை வகிக்கிறார். [5]

சவுதி அரேபியாவின் கிசான் , கிங் ஃபகத் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வருகை தரும் ஆலோசகராகவும், அமெரிக்காவின் விசுகான்சின் மில்வாக்கி குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். [5]

தற்போது இவர் பின்வரும் அலுவலகங்களில் பொறுப்பு வகிக்கிறார்:

  • தேசிய பிறந்த குழந்தைகள் மன்றத்தின் தலைவர். [5] [6]
  • ஊட்டச்சத்து ஆலோசனைக் குழுவின் ஆலோசகர், ஊட்டச்சத்து வினவல்கள் மீதான நிகழ்நேர சேவையில் பதிலளிக்கிறார்.
  • ஆசிரியர் -'பிறந்த குழந்தைகள் காலாண்டு செய்தி இதழின் ஆசிரியர். தேசிய பிறந்த குழந்தைகள் மன்றத்தின் வெளியீடு
  • ஆசியா மற்றும் ஓசியானியா பிறப்பு சார்ந்த சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் தலைவர் [7]
  • உறுப்பினர் - தென்கிழக்கு ஆசியாவில் பிறப்பு குறைபாடுகளை தடுப்பதற்கான உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு. [2] உறுப்பினர்.
  • அமெரிக்க குழந்தைகள் அகாடமியின் முதன்மைப் பயிற்சியாளர் - குழந்தையின் சுவாச உதவி. [2]
  • குறைப்பிரசவ குழந்தைகளுக்கு உணவளிப்பது குறித்த சர்வதேச வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கான உலகளாவிய பிறந்த குழந்தை ஊட்டச்சத்து ஒருமித்த குழுவில் [2] </ref> உறுப்பினர்.

பல்வேறு கட்டங்களில், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம், [8] மற்றும் உலக சுகாதார அமைப்பு, [9] ஆகியவற்றுடன் இணைந்து பிறந்த குழந்தைப் பராமரிப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களில் பணியாற்றியுள்ளார். [2] [10] சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பிறந்த குழந்தை மற்றும் குழந்தை நல மூலோபாயத்தின் குழு உறுப்பினராகவும் உள்ளார். [11]

சமூக முன்னணியில், மருத்துவர் கிளர் அனைத்து பெண்கள் கூட்ட்டமைப்பின் சுகாதாரப் பராமரிப்புக்கு தலைமை தாங்குகிறார். [12]

மரபு

[தொகு]
செயற்கை உயிர்ப்பு அறையில் முன்கூட்டியே பிறந்த குழந்தை

நீலம் கிளர் பிறந்த குழந்தை பராமரிப்பு, குறிப்பாக குறைப்பிரசவ குழந்தைகளின் பராமரிப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக நன்கு அறியப்படுகிறார், மேலும் தீவிர சிகிச்சை மற்றும் செயற்கை உயிர்ப்பு அறை காற்றோட்டம் ஆகியவற்றில் முன்னோடியாகக் கருதப்படுகிறார். நைட்ரிக் ஆக்சைடு பிரசவம் மற்றும் படுக்கை பெருமூளை செயல்பாடு கண்காணிப்புடன் நவீன உயர் அதிர்வெண் காற்றோட்டத்துடன் கூடிய நவீன வசதிக்காக புதுடெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் சிகிச்சைத் துறையை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. மருத்துவர் கிளர் , 1000 கிராமுக்கும் குறைவான எடையுள்ள, முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளின் உயிர்வாழும் விகிதம் 90 சதவிகிதமாக மேம்பட்டுள்ளதாகவும், நோய்த்தொற்று விகிதம் 1000 உள் நோயாளிகளுக்கு 9.8 ஆகக் குறைக்கப்பட்டதாகவும் புள்ளிவிவரத் தகவல்கள் காட்டுகின்றன. [2]

தேசிய தேர்வு வாரியத்தால் பிறந்த குழந்தை துறை மூன்று ஆண்டு முனைவர் பட்டப்படிப்பைத் தொடங்குவதிலும் இவர் பங்களித்துள்ளார். [11]

விருதுகள்

[தொகு]
  • பத்மபூசண் -விருது - 2014 ஆம் ஆண்டு மருத்துவ துறைக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பிரிவின் ஒரே பெறுநர் [13] [14]

வெளியீடுகள்

[தொகு]

நீலம் கிளர் குழந்தை மருத்துவம் பற்றிய தேசிய மற்றும் சர்வதேச புத்தகங்களில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், [15] [16] :

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Daily Pioneer". பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "pre term babies". பார்க்கப்பட்ட நாள் 21 July 2014."pre term babies". Retrieved 21 July 2014.
  3. "Padma bhushan". Newsreport. The Hindu. 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  4. 4.0 4.1 "FB". பார்க்கப்பட்ட நாள் 20 July 2014."FB". Retrieved 20 July 2014.
  5. 5.0 5.1 5.2 5.3 "Bio 1". பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  6. "NNF" (PDF). Archived from the original (PDF) on 29 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "FAOPS 2010" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  8. "UNICEF" (PDF). Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "WHO" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  10. "Standford". Archived from the original on 27 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. 11.0 11.1 "BS". பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  12. "ALL". பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
  13. "only doctor". பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "medicine category". Archived from the original on 9 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "List 1". Archived from the original on 25 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. "List 2". Archived from the original on 23 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

 

புற இணைப்புகள்

[தொகு]