தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | நீல் வாக்னர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 13 மார்ச்சு 1986 பிரிட்டோரியா, ட்ரான்ஸ்வசல் மாகாணம், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | வாக்கர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை மித வேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 256) | 25 July 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 29 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2005/06–2007/08 | நார்த்தன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006/07–2007/08 | டைட்டன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008/09–2017/18 | ஒட்டாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014 | நார்த்தன்ட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | லாங்கஷைர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017–தற்போது | எஸ்செக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018/19–தற்போது | நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2019 |
நீல் வாக்னர்(Neil Wagner, பிறப்பு: 13 மார்ச் 1986) என்பவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து தேர்வுத் துடுப்பாட்டக்காரர் ஆவார். வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரான இவர் பன்னாட்டுப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணிக்காக 2012ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுப் போட்டியில் அறிமுகமானார்.
6 ஏப்ரல் 2011இல் வெல்லிங்டன் அணிக்கு எதிரான போட்டியில் தனது 4 பந்துகளில் 4 மட்டையாளர்களை வீழ்த்தினார். தொடர்ந்து அதே நிறைவின் 6வது பந்தில் மற்றொரு மட்டையாளரையும் வீழ்த்தினார். இவ்வாறு ஒரே நிறைவின் 6 பந்துகளில் 5 மட்டையாளர்களை வீழ்த்தி முதல் தரத் துடுப்பாட்ட வரலாற்றில் புதிய உலக சாதனையைப் பதிவு செய்தார். அவரது இந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது.[1][2][3]