நுண்ணிய வானூர்தி

ஆர்கியூ-16 டி-கோக் நுண்ணிய வானூர்தி பரீட்சார்த்த சண்டை முறையில் சோதனை செய்யப்படுகின்றது.

நுண்ணிய வானூர்தி (micro air vehicle - MAV / micro aerial vehicle) என்பது அளவில் கட்டுப்படுத்தப்பட்ட, சுயமாக இயங்கவல்ல ஆளில்லாத வானூர்தி ஆகும். தற்கால வானூர்தி 15 செ.மீட்டர் அளவு சிறியதாக இருக்கக் கூடியது. நுண்ணிய வானூர்தி வாணிப, ஆய்வு, அரசாங்க மற்றும் இராணுவ தேவைகளுக்காக வடிவமைக்கப்படுகின்றன. பூச்சி அளவு வானூர்திகள் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன. சிறிய வானூர்த்தி தரையினால் சென்று அடைய முடியாத, ஆபத்தான இடங்களை அவதானிக்க உதவுகின்றது. நுண்ணிய வானூர்தி பொமுதுபோக்கு நோக்கில்,[1] வான் தானியங்கியியல் போட்டி, வான் ஒளிப்படம் ஆகியவற்றுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டன.

உசாத்துணை

[தொகு]
  1. MAV multicopter hobby project "Shrediquette BOLT", http://shrediquette.blogspot.de/p/shrediquette-bolt.html