நுண்ணுயிரியலுக்கான கார்லோசு ஜு. பின்லே பரிசு (Carlos J. Finlay Prize for Microbiology) என்பது கியூபா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஈராண்டுக்கு ஒருமுறை அறிவியல் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசாகும், இது 1980 முதல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) நுண்ணுயிரியலில் (நோயெதிர்ப்பு, மூலக்கூறு உயிரியல், மரபியல் உள்ளிட்ட) சிறந்த பங்களிப்புகளுக்காக அறிவியலாளர் அல்லது அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. வெற்றியாளர்கள் கியூபா அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடையாக 5,000 அமெரிக்க டாலருடன் யுனெசுகோவின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெள்ளிப் பதக்கத்தினைப் பெறுகிறார்கள்.[1]
இந்தப் பரிசு ஒற்றைப்படை ஆண்டுகளில் வழங்கப்படுகிறது (யுனெஸ்கோவின் பொது மாநாடு நிகழ்வுடன் ஒத்துப்போகிறது). மஞ்சள் காய்ச்சல் துறையில் தனது முன்னோடி கண்டுபிடிப்புகளுக்காகப் பரவலாக அறியப்பட்ட கியூபா மருத்துவரும் நுண்ணுயிரியலாளருமான கார்லோஸ் ஜுவான் பின்லே (1833-1915) நினைவாக இப்பரிசிற்குப் பெயரிடப்பட்டது.
↑ 2.02.12.22.32.4Shabaan, Saad Ahmed; Döbereiner, Johanna; Alvarez-Gaumé, Luis; Sarma, D.D.; Cohen, Georges N.; Fiers, Walter (8 November 1989). "Ceremony of award of four UNESCO science prizes". unesdoc.unesco.org. UNESCO. p. 42. பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.