நெஞ்சில் ஓர் ஆலயம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஸ்ரீதர் |
கதை | ஸ்ரீதர் 'சித்ராலயா' கோபு[1] |
இசை | விஸ்வநாதன், ராமமூர்த்தி |
நடிப்பு | முத்துராமன் கல்யாண் குமார் தேவிகா குட்டி பத்மினி வி. எஸ். ராகவன் |
ஒளிப்பதிவு | வின்செண்ட் |
கலையகம் | சித்ராலயா பிக்சர்ஸ் |
வெளியீடு | 1962 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சில் ஓர் ஆலயம் 1962-ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெற்றித்திரைப்படமாகும். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவிகா, வி. எஸ். ராகவன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படமுமாகும். இத்திரைப்படத்திற்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
இப்படம் பிரபல ஆங்கில படமான 'காசாபிளாங்கா’வின் சாயலில் ஒட்டி எடுக்கப்பட்டதாகும்.[2]
காதலர்களான கல்யாண்குமாரும் தேவிகாவும் விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் புற்று நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமாராகவே இருக்கக்கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைப்படம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இது பாடல்கள், காட்சியமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.கல்யாணப் பரிசு திரைப்படத்தை அடுத்து முக்கோணக் காதல் கதை இயக்குநர் என்ற பெயரை ஸ்ரீதருக்கு இது நிலை நாட்டியது.
நெஞ்சில் ஓர் ஆலயம் | |
---|---|
பாடல்கள் நெஞ்சில் ஓர் ஆலயம்
| |
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | விஸ்வநாதன், ராமமூர்த்தி |
பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.
பாடல்கள்[5] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியவர்(கள்) | நீளம் | |||||||
1. | "எங்கிருந்தாலும் வாழ்க" | ஏ. எல். ராகவன் | 03:16 | |||||||
2. | "என்ன நினைத்து என்னை" | பி. சுசீலா | 03:30 | |||||||
3. | "முத்தான முத்தல்லவோ" | பி. சுசீலா | 03:35 | |||||||
4. | "நினைப்பதெல்லாம்" | பி. பி. ஸ்ரீநிவாஸ் | 03:28 | |||||||
5. | "ஒருவர் வாழும் ஆலயம்" | எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் | 03:43 | |||||||
6. | "சொன்னது நீதானா" | பி. சுசீலா | 03:35 |
ராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகியோரின் நடிப்பில் தில் ஏக் மந்திர் (1963) என்னும் பெயரில் இயக்குநர் ஸ்ரீதர் இந்தியில் இயக்கினார்.[6] குட்டி பத்மினி ஹிந்தி மறுவாக்கத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் மானசி மந்திரம் (1966) என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது. கன்னடத்தில் குங்கும ரக்சி என்னும் பெயரில் வெளியானது.