நெடுமுடி வேணு | |
---|---|
![]() கே. வேணு கோபல் | |
பிறப்பு | ஆலப்புழை, கேரளா, இந்தியா | 22 மே 1948
இறப்பு | அக்டோபர் 11, 2021 திருவனந்தபுரம் | (அகவை 73)
இருப்பிடம் | திருவனந்தபுரம், இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 32 |
பெற்றோர்(கள்) | பி. கே. கேசவன், பி. குஞ்ஞிக்குட்டியம்மா |
வாழ்க்கைத் துணை | டி. ஆர். சுசீலா |
பிள்ளைகள் | உன்னி, கண்ணன் |
நெடுமுடி வேணு (Nedumudi Venu; மலையாளம்: നെടുമുടി വേണു, 22 மே 1948 – 11 அக்டோபர் 2021) இந்தியாவின் கேரளாவைச் சார்ந்த திரைப்பட நடிகர் ஆவார்[1]. இவர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றினார். இவரது இயற்பெயர் கே. வேணு கோபால் (K. Venu Gopal) ஆகும். நாடகத்தில் நடித்த பெயரான நெடுமுடி வேணு என்றே பெரும்பாலும் அறியப்பட்டார். இவர் திரைக்கதையும் எழுதியதோடு, ஒரு மலையாளத் திரைப்படத்தையும் இயக்கினார்.[2][3][4][5]. இவர் கேரளா மாநிலத்தின் ஆலப்புழையில் பிறந்தவர். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் கலாகெளமுதி பத்திரிகையில் பணியாற்றினார். இவரது பெற்றோர் பி. கே. கேசவன், பி. குஞ்ஞிக்குட்டியம்மா ஆவர். இவரது மனைவியின் பெயர் டி. ஆர். சுசீலா. இவரின் மகன்கள் உன்னி, கண்ணன் என்போர் ஆவர்.[6]