நெல்சன் அருவி | |
---|---|
நெல்சன் அருவி | |
அமைவிடம் | மேற்கு கரை, தாஸ்மானியா ஆத்திரேலியா |
ஆள்கூறு | 42°05′24″S 145°43′48″E / 42.09000°S 145.73000°E[2] |
வகை | அடுக்கு அருவி |
மொத்த உயரம் | 30 மீட்டர்கள் (98 அடி)[1] |
நெல்சன் அருவி (Nelson Falls), என்பது அடுக்கு அருவி ஆகும். இது ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவின் மேற்கு கடற்கரை பிராந்தியத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள், கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரியக் களம் எனப் பட்டியலிடப்பட்ட டாஸ்மேனிய வனப்பகுதியில் அமைந்துள்ளது.
நெல்சன் நீர்வீழ்ச்சி பிராங்க்ளின்-கோர்டன் காட்டு நதிகள் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இது குயின்சுடவுண்லிருந்து 27 கிலோமீட்டர்கள் (17 mi) தொலைவில் மேற்கில், லைல் நெடுஞ்சாலை வழியாக நெல்சன் பள்ளத்தாக்கினை அடையலாம். இந்த அருவி பர்பரி ஏரியில் கலக்கும் நெல்சன் ஆற்றில் உள்ளது இந்த அருவி. நெல்சன் ஆறு சுமார் சுமார் 30 மீட்டர்கள் (98 அடி) உயரமுடையது.