வகை | பொது நிறுவனம் |
---|---|
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | உணவுப்பொருள், அழகு சாதன பொருட்கள், கழிப்பறை உப பொருட்கள் |
வருமானம் | ₹19,247 கோடி (US$2.4 பில்லியன்) (2023)[2] |
இயக்க வருமானம் | ₹4,044 கோடி (US$510 மில்லியன்) (2023)[2] |
நிகர வருமானம் | ₹2,998 கோடி (US$380 மில்லியன்) (2023)[2] |
மொத்தச் சொத்துகள் | ₹10,094 கோடி (US$1.3 பில்லியன்) (2023)[2] |
மொத்த பங்குத்தொகை | ₹3,092 கோடி (US$390 மில்லியன்) (2023)[2] |
பணியாளர் | 7,649[1] |
தாய் நிறுவனம் | நெஸ்ட்லே (62.76%)[1][3] |
நெஸ்லே இந்தியா லிமிடெட் என்பது சுவிஸ் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேவின் இந்திய துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் உணவு, பானங்கள், சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் ஆகியவை அடங்கும். [4] [1] [5]
இந்நிறுவனம் 28 மார்ச் 1959 அன்று இந்தியாவில் நிறுவப்பட்டு, நெஸ்லே ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற துணை நிறுவனம் மூலம் தரம் உயர்த்தப்பட்டது[6][7] 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, தாய் நிறுவனமான நெஸ்லே, நெஸ்லே இந்தியாவின் 62.76% பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறது.[3] இந்நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் 9 உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது.[8]