நேதோஜி பல்கார் | |
---|---|
![]() | |
மராத்திய பேரரசின் தலைமைப் படைத்தலைவர் | |
பிறப்பு | 1620 காலாப்பூர், ராய்கட் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
இறப்பு | 1681 |
மதம் | இந்து சமயம் |
நெதோஜி பல்கார் (Netoji Palkar) (1620–1681) மராத்தியப் பேரரசர் சிவாஜியின் தலைமைப் படைத்தலைவர் ஆவார். இவர் சந்திராசேனியா காயஸ்த பிரபு குடும்பத்தில் பிறந்தவர். [1]நேதாஜியின் தந்தை பிஜப்பூர் சுல்தானகத்தில் ஒரு ஜாகீர்தாராக இருந்தவர்.[2]
சிவாஜியின் தலைமைப் படைத்தலைவராக இருந்த மன்கோஜி ததோன்டே 1657-இல் இறந்த பிறகு நேதோஜி பல்கார் தலைமைப் படைத்தலவரானார். அப்சல் கானின் இறப்பிறகுப் பின்னர், நேதோஜி பல்கார் பிஜப்பூர் சுல்தானகத்தின் பெரும்பகுதிகளை கைப்பற்றினார். இவரை சிவாஜியின் மறு உருவம் என்பர். [3]1665 வரை இவர் தக்காணத்தின் முகலாயப் படைகளை சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
1665-இல் செய்து கொள்ளப்பட்ட புரந்தர் உடன்படிக்கை (1665) படி, சிவாஜி தன்னிடமிருந்த 13 கோட்டைகளை முகலாயர்களைக்கு வழங்கினார். இருப்பினும் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் நிலப்பரப்புகளை கைப்பற்றினார். இக்காலத்தில் நேதோஜி பல்கார் பிஜப்ப்பூர் சுல்தானின் படைகளிடம் சிக்கினார். இதனிடையே முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆணையின் பேரில், சிவாஜி தனது படைபலத்தை குறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. மேலும் சிவாஜி, பிஜப்பூர் சுல்தானிடம் சிக்கிய நேதோஜி பல்காரை விடுவிக்கும் முயற்சியை அவுரங்கசீப் தடுத்தார்.
அவுரங்கசீப்பை, சிவாஜி ஆக்ராவில் சந்திக்கும் போது நேதோஜி பல்கார், முகலாய தலைமைப் படைத்தலைவர் முதலாம் ஜெய் சிங்கின் படையில் சேர்ந்திருந்தார். சிவாஜி ஆக்ரா கோட்டையிலிருந்து தப்பியதால் முதலாம் ஜெய் சிங் அவுரங்கசீப்பின் நன்மதிப்பை இழந்தார்.[4]
ஆக்ரா கோட்டையிலிருந்து சிவாஜி தப்பியதால், கோபமுற்ற அவுரங்கசீப், பழிக்குப் பழியாக, நேதோஜி பல்காரை சிறையில் அடைக்க ஜெய் சிங்கிற்கு உத்தரவிட்டார். மேலும் நேதோஜி பல்காரை இசுலாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு, முகமது குலி கான் என பெயரிடப்பட்டது. மேலும் நேதோஜி பல்காரின் மனைவிகளை தில்லிக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களை இசுலாம் மதத்திற்கு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்.
நேதோஜி பல்கார் ஆப்கானித்தானில் உள்ள கந்தகார் கோட்டையின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். முகலாயப் பேரரசுக்கு ஆதரவாக நேதோஜி பல்கார் பஷ்தூன் போராளிகளுக்கு எதிராக காபூல், காந்தாரம் பகுதிகளில் போரிட்டார். இதனால் அவுரங்கசீப்பிற்கு நேதோஜி பல்கார் மீது நம்பிக்கை கூடியதால், அவரைக் கொண்டு சிவாஜியை பிடிப்பதற்கான, தக்காணப் படைத் தலைவர் திலிர் கானின் தலைமையிலான படையில் சேர்த்தார்.
மகாராட்டிராவை வந்தடைந்த நேதாஜி பல்கார், சிவாஜியின் ராய்கட் கோட்டைக்குச் சென்று, தன்னை மீண்டும் இந்து சமயத்தில் இணைத்துக் கொண்டார். [5][1]நேதாஜி பல்கார் 1681-இல் இறந்தார்.
Netaji Palkar, who, on account of his superb valour was known as a second Shivaji at his time, was lured by Mirza Jaisingh into Auranzeb's services, and in 1667 was forcibly converted to Islam. ...Only in 1676 could he get an opportunity to escape to Deccan and straightway seek a meeting with Shivaji. He was not only brought back to Hinduism but was taken back into his own community of Kayastha Prabhus without the least objection from anyone. Thus, the doors of Hinduism were opened to all those who wanted to return to it.
{{cite magazine}}
: Cite magazine requires |magazine=
(help)