![]() | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | ![]() |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
பயிற்றுவித்தது | தாமஸ் எசெஷ் |
நேத்ரா குமணன் (Nethra Kumanan) என்பவர் ஒரு இந்திய பாய்மரப் படகோட்டும் வீராங்கனையாவார். இவர் பாய்மரப் படகோட்டும் போட்டியில் உலகக் கோப்பை பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்ற முதல் இந்திய பெண் படகோட்டி இவர் ஆவார்.
நேத்ரா குமணன் எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தின் வடபழனி வளாகத்தில் பி.டெக்-இயந்திரப் பொறியியில் படித்துவருகிறார்.[1][2][3][4]
பாய்மரப் படகு ஓட்டிவதில் ஆர்வம் கொண்ட நேத்ரா 2014, 2018 ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். பின்னர் 2020ஆம் ஆண்டு நடந்த உலக கோட்டை போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். பாய்மரப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவராவார். 2021 சூலை முதல் நடைபெறவுள்ள 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் லேசர் ரேடியல் எனப்படும் தனிநபர் பாய்மரப் படகோட்டும் பிரிவில் பங்கேற்கவிருக்கிறார். இந்த போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் இவராவார்.[5]