நேனோபேக்ரஸ் நெபுலோசஸ் (Nanobagrus nebulosus) என்பது பேக்ரிட் கெளுத்தி மீன் குடும்பத்தைச் உள்ள ஒரு சிற்றினம் ஆகும். இது தென்கிழக்கு மலேசியா தீபகற்பத்தில் உள்ள என்டாவ் என்ற இடத்திலும், செடிலி ஆற்றின் வடிநிலப் பகுதியிலும் ஆண்டு முழுவதும் காணப்படும் கெளுத்தி மீன் வகையாகும்.[1] இது 3.5 செ.மீ நீளம் வளரக்கூடியது. இதன் பழுப்பு நிற உடலில் பக்கவாட்டு வாியினூடும், அதன் மேலும். கீழும் மூன்று வாிகளில் இளமஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படுகின்றன.[2]