நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம் व्यवस्थापिका संसद | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
தலைவர் | ஒன்சாரி கார்தி மகர், நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 16 அக்டோபர் 2013 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 593 |
, 2013 | |
அரசியல் குழுக்கள் | நேபாளி காங்கிரஸ்:225
நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி: 24
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி: 19
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி: 18
நேபாள சோசலிச கூட்டமைப்பு: 15
நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு): 5
நேபாள தொழிலாளர்கள் & விவசாயிகள் கட்சி: 4
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா :3
நேபாள் பரிவார் தளம் :2
பிற கட்சிகள்:10
சுயேச்சைகள்: 2 |
ஆட்சிக்காலம் | நான்கு ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
வாக்களிப்பு முறை: கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில், வாக்காளர்கள் நேரடியாக 240 உறுப்பினர்களையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் 335 உறுப்பினர்களும், தேர்ந்தெடுப்பர். நேபாள பிரதமர் நியமிக்கும் இரண்டு உறுப்பினர்களை நியமிப்பார். | |
அண்மைய தேர்தல் | நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம், 2013 |
அடுத்த தேர்தல் | நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017 |
வலைத்தளம் | |
http://www.parliament.gov.np/ |
நேபாள அரசியல் நிர்ணயமன்றம், 2013 (Legislature Parliament of Nepal) (நேபாளி: व्यवस्थापिका संसद) ஓரவையுடன் கூடியது.[1] நேபாளத்தின் முதல் அரசியலமைப்பு நிர்ணய மன்றம், புதிய அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற தவறியதால், 2013ல் நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இந்த இரண்டாவது புதிய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது.[2] இந்த அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இயற்றிய நேபாள அரசியலமைப்புச் சட்டம், 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது.
நேபாளத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டப்படி நேபாள நாடாளுமன்றத்திற்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 அன்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால்[3], அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் பணிக் காலம் 14 அக்டோபர் 2017ல் முடிவடைந்தது. [4]
முன்னாள் நேபாள பிரதம அமைச்சரும், நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும் ஆன சூரிய பகதூர் தாபா, 20 சனவரி 2014ல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இம்மன்றத்தின் முதல் கூட்டத்தில் 565 உறுப்பினர்கள் 21 சனவரி 2014 அன்று பதவியேற்பு உறுதிமொழி ஏற்றனர். [6]நேபாளத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஓராண்டிற்குள் அரசியலமைப்பின் வரைவு நகலை தயாரிக்க உறுதியளித்தனர்.[7] [8] இதன் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்.
அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் வரைவு அறிக்கையின் படி, நேபாள நாடாளுமன்றம் கீழவை மற்றும் மேலவை என இரண்டு சபைகளைக் கொண்டிருக்கும். வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடும் உறுப்பினர்கள் கொண்ட, பிரதிநிதிகள் சபையும் (கீழவை), கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் கொண்ட, தேசிய சட்டமன்றமும் (மேலவை) கொண்டிருக்கும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் நேபாளப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஓரவை கொண்ட நேபாள மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், வாக்களாளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநில சட்டமன்றத் தேர்தல்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை நடைமுறை இல்லை.
புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றுவதற்கு உதவியாக கீழ் கண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டது.[9]
அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் வரைவு அறிக்கையின் படி, 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றம் கீழவை மற்றும் மேலவை என இரண்டு சபைகளைக் கொண்டிருக்கும். வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடும் 165 உறுப்பினர்கள் கொண்ட, பிரதிநிதிகள் சபையும் (கீழவை), கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 110 உறுப்பினர்கள் கொண்ட, தேசிய சட்டமன்றமும் (மேலவை) கொண்டிருக்கும்.[10]
நேபாள அரசியல் நிர்ணய மன்றத்தின் வரைவு அரசியலமைப்பு சட்டம், நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015 என்ற பெயரில், 20 செப்டம்பர் 2015 முதல் நடைமுறைக்கு வந்ததது. இதன் மூலம் முந்தைய 2007ம் ஆண்டின் தற்காலிக அரசியல் அமைப்பு சட்டம் நீக்கப்பட்டது.
நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம், நேபாள அரசை சமயச் சார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசு என பெயரிட ஏற்றது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)