நேபாள சமஸ்கிருத பல்கலைக்கழகம் (Nepal Sanskrit University) (முன்னர் இதன் பெயர் மகேந்திரா சமஸ்கிருத பல்கலைக்கழகம்)டிசம்பர், 1986ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இப்பல்கலைழகம் நேபாளத்தின் லும்பினி மாநிலத்தின்தாங் மாவட்டத்தில் உள்ள பெல்சுண்டி எனுமிடத்தில் இயங்குகிறது. இது கோரக்கி நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இப்பல்கலைக்கழகம் சமசுகிருத மொழியில் இளங்கலை சாஸ்திரி பட்டம், இளங்கலை கல்வியியல் பட்டம், முதுகலை ஆச்சாரியர் பட்டம் மற்றும் பாரம்பரிய மற்றும் நவீன படிப்புகளில் முனைவர் பட்டங்கள் வழங்குகிற்து. மேலும் இப்பல்கலைக்கழகம் இளங்கலை ஆயுர்வேதப் படிப்பில் மருத்துவம் மற்றும் இரண சிகிச்சை கற்றுத்தரப்படுகிறது. சமசுகிருதம் மற்றும் பௌத்தம் அடிப்படையில் இளங்கலை பட்டப் படிப்பில் யோகக் கலையை கற்பித்தல். மேலும் இப்பல்கலைக்கழகம் இந்து சமய ஆலயங்கள் கட்டுமானம் தொடர்பான ஸ்தபதி (கட்டிடக்கலை) நிறுவனம் துவக்க உள்ளது. இப்பல்கலைகழகத்தில் நாடு முழுவதும் உள்ள 13 கல்லூரிகள் இணைந்துள்ளது.
நேபாள பிரதம அமைச்சர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். நேபாளத்தின் கல்வி அமைச்சர் இதன் இணை-வேந்தர் ஆவார். துணை வேந்தர் இப்பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.