![]() | |
நிறுவப்பட்டது | 1928 |
---|---|
அமைவிடம் | Chhauni, காட்மாண்டு, ![]() |
ஆள்கூற்று | 27°42′20″N 85°17′20″E / 27.705605°N 85.289011°E |
வகை | வரலாற்று அருங்காட்சியகம் |
வலைத்தளம் | www.nationalmuseum.gov.np |
நேபாள தேசிய அருங்காட்சியகம் (National Museum of Nepal) தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மிகவும் ஈர்ப்பு நிறைந்த இடமாகும். இந்த அருங்காட்சியகமானது நேபாளத்தின் நூற்றாண்டு பழமையான சுற்றுலாத் தலமாகவும் மற்றும் வரலாற்றுச் சின்னமாகவும் அமைந்துள்ளது. நேபாளத்தின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இருப்பதனால் நாடு தழுவிய தொல்பொருள் பணி மற்றும் அருங்காட்சியகங்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காத்மாண்டுவில் குடியிருப்பவர்களுக்கு, இந்த நினைவுச்சின்னம் நேபாளத்திற்காகப் படைக்களங்களில் போராடிய நினைவுகளிலிருந்து விடுபட உதவுகிறது. இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான ஈர்ப்பாக வரலாற்று கலைப்படைப்புகளும் (சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள்) மற்றும் 18-19 ஆம் நூற்றாண்டில் வரலாற்றுரீதியிலான போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் காட்சிப்படுத்தல் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் சிலைகள், ஓவியங்கள், சுவரோவியங்கள், நாணயங்கள் மற்றும் ஆயுதங்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அர்ப்பணிக்கப்பட்ட காட்சியகங்கள் உள்ளன.[1]
இந்த அருங்காட்சியகம் மூன்று கட்டிடங்களைக் கொண்டுள்ளது. அவை, ஜுத்தா ஜ்யாதியா கலாசாலை, புத்தா ஓவிய காட்சியகம் மற்றும் முதன்மை கட்டிடம் ஆகியவை ஆகும். இக்கட்டிடம் இயற்கை வரலாற்றுப் பிரிவையும், (பதப்படுத்தப்பட்ட மிருகங்கள், பதப்படுத்தப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தாவரங்கள்) கலாச்சாரப் பிரிவையும், அஞ்சல் தலைப் பிரிவையும் கொண்டுள்ளது.
இந்த தேசிய அருங்காட்சியகமானது, நேபாளத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் குடிமை வான்வழிப்போக்குவரத்துத் துறையின் கீழ் வருகிறது. இந்த அருங்காட்சியகம் நேபாள மக்களின் கடந்த கால மற்றும் நிகழ் கால மரபுகளை சித்தரித்துக் காட்டும் நடைமுறைப் பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
நேபாள தேசிய அருங்காட்சியகம் 1928 ஆம் ஆண்டில் 19 ஆம் நுாற்றாண்டில் தொடக்கத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடம் ஒன்றைப் பயன்படுத்தி நிறுவவப்பட்டது. [2] முன்னதாக, இந்தக் கட்டிடமானது, பிம்சென் தாபா என்ற பிரதம அமைச்சரின் குடியிருப்பாக இருந்தது. இந்தக் கட்டிடத்தில் வெண்கலச் சிலைகளின் சேகரிக்கப்பட்ட தொகுப்பு, பாவ்பா ஓவியங்கள் மற்றும் பிரான்சின் அரசியல் தலைவனாகவும் ஆட்சியாளனாகவும் இருந்த பிரான்சின் முதலாம் நெப்போலியனால் வழங்கப்பட்ட வாள் போன்றவற்றைக் கொண்டிருந்தது.[3] இந்த அருங்காட்சியகமானது ஆயுதக்கிடங்கு எனப் பொருள் தரக்கூடிய ”சௌனி சில்கானா” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. உண்மையில் அந்த காலகட்டத்தில் இந்த காட்சியகம் நேபாள போர் வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிவகை ஆயுதங்களையும், பண்டைய உலோக ஆயுதங்களையும் காட்சிப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது.[2][4]
பிரதம அமைச்சர் ஜத்தா சாம்செர் ஜங் பகதுார் ரானாவால் இந்த காட்சியகமானது மக்களின் பார்வைக்காக 1939 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் முதல் திறந்து வைக்கப்பட்டது. அவர் நேபாள குடிமக்களிடமிருந்து மிகச்சிறிய கட்டணத்தை இதற்காக வசூலித்து அத்தொகையிலிருந்து கலை மற்றும் ஓவிய அருங்காட்சியகத்திற்காகஒரு கட்டிடத்தை எழுப்பி அதற்கு ”ஜுத்தா ஜடியா கலாசாலை” என்று தனது பெயரைச் சூட்டினார். 1939 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் இந்த அரிய தொகுப்புகள் கொண்ட காட்சியகமானது, வெளிநாட்டுக் கல்வியாளர்கள், மதிப்புமிகுந்தவர்கள், நேபாள பிரதம அமைச்சரின் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரால் மட்டுமே எப்போதாவது பார்வையிடும் ஒரு இடமாக இருந்து வந்துள்ளது. கலைக்காட்சியகமானது 1943 ஆம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. [5]1967 ஆம் ஆண்டில் மேன்மை தங்கிய மன்னர் மகேந்திரன் என்பவரது ஆட்சிக்காலத்தில் சௌனி சில்கானா என்ற பெயர் மாற்றப்பட்டு நேபாளத்தின் தேசிய அருங்காட்சியகம் என்ற பெயர் சூட்டப்பட்டது.[6]
நேபாளத்தின் தேசிய அருங்காட்சியகம் காட்மாண்டு நகரத்தில் சுயம்புநாதர் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் பழைய கட்டிடம் விஷ்ணு ஆற்றின் மேற்குக் கரையில், ஒரு மலைப்பாங்கான பின்னணிக்கு எதிர்புறத்தில் அமைந்துள்ளது. [7]அருங்காட்சியகத்தில் நுழையும் போது, இடது புறத்தில், சிலைகள், மரச்சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ள கலைக் காட்சியகம் அமைந்துள்ளது. நுழைவு வாயிலுக்கு நேர் எதிராக உள்ள கட்டிடமானது பௌத்த கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ள கலைக்கூடமாகவும், வலது புறமாக உள்ள கட்டடிடமானது இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகமாகவும் உள்ளது.